டி.சி., கேட்டு மாணவர்கள் போராட்டம்.

அடிப்படை வசதிகள் செய்து தராததால், பாரதியார் பல்கலைக்கூட மாணவர்கள் கல்லூரியில் இருந்து வெளியேற, மாற்றுச்சான்றிதழ் (டி.சி.) கேட்டு, வகுப்புகளை புறக்கணித்து நேற்று போராட்டம் நடத்தினர்.

அரியாங்குப்பத்தில் உள்ள பாரதியார் பல்கலைக்கூடத்தில், இளங்கலை ஓவிய நுண்கலை, இசை மற்றும் நடன
துறைகளில், 136 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இக்கல்லூரியில் கடந்த 3 ஆண்டுகளாக முதல்வர் பணியிடம் காலியாக உள்ளது. கல்லூரிக்கு முதல்வரை நியமிக்க வேண்டும், அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தர வேண்டும், பட்ட மேற்படிப்பு கொண்டுவர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

எனினும் அரசு இக்கல்வி நிறுவனத்திற்கு போதிய அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என கூறி, இங்கு பயிலும் 136 மாணவர்களும், கல்லூரியில் இருந்து வெளியேற, மாற்றுச்சான்றிதழ் கேட்டு கடந்த 2 தினங்களுக்கு முன்பு கல்லூரி நிர்வாகத்திடம் கடிதம் வழங்கினர்.

மாணவர்கள் நேற்று முன்தினம், துறை செயலரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, கல்லூரிக்கு முதல்வர் நியமிப்பதில் பல சிக்கல் உள்ளதால், உடனடியாக கோரிக்கையை நிறைவேற்ற முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மாற்றுச்சான்றிதழ் (டி.சி.) கேட்டு, வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் கல்லூரி வாயிலில் அமர்ந்து நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...