தமிழகத்தில் எங்கெங்கு என்னென்ன கனிமங்கள்!

பூமி 500 கோடி ஆண்டுகளுக்கு முன் சூரியனிடம் இருந்து பிரிந்து, நெருப்புக் குழம்பாக இருந்தது. காலப்போக்கில் குளிர்ந்து இறுகியது. பூமி சுற்றும் சுழற்சியின்  காரணமாக கனிம பொருட்களின் தனிமங்களை கொண்ட அணுத்திரள்கள் அடுக்குகளாக திரண்டு, பல்வேறு வகை பாறைகளை தோற்றுவித்தன. உலகம்  தோன்றியது முதல் இன்று வரையுள்ள காலத்தை 5 பேரழிவுகளாக பிரித்துள்ளனர்.
ஒவ்வொரு காலத்திலும் நிலப்பரப்பு உருமாற்றம் அடைந்துள்ளது. இந்த  பேரழிவு காலங்களில்தான் தமிழகத்தில் கனிமங்கள் தோன்றின. இதில் மாக்னசைட், இரும்பு, சுண்ணாம்புக்கல், தங்கம், அலுமினியம், செம்பு, ஜிப்சம்,  வெர்குலைட், கி¬ராபைட், பெல்ஸ்பார், கண்ணாடி மணல் ஆகிய கனிமங்கள் முக்கியமானதாகும்.

திருச்சி, சேலம், மதுரை, கோவை, திருநெல்வேலி மாவட்டங்களில் படிகவய சுண்ணாம்புக்கல், கடல் வண்டலில் தோன்றிய சுண்ணாம்புக்கல், பவள  சுண்ணாம்புக்கல், சுக்கான் பாறை, கிளிஞ்சல் சுண்ணாம்புக்கல் என ஐவகை சுண்ணாம்புக்கற்கள் உள்ளன. ராமேஸ்வரம், தூத்துக்குடி இடையே மன்னார்  வளைகுடாவிலுள்ள தீவுகளில் பவளக்கொடிகளில் சுண்ணாம்பு கல் உள்ளது. சென்னை அருகே புலிகாட்டிலும் கன்னியாகுமரி மாவட்டத்திலும் கிளிஞ்சல்  சுண்ணாம்பு கிடைக்கின்றன. வெண்மை களிமண் கனிமம் சேலம் சேர்வராயன் மலைத் தொடரில் அலுமினிய கனிமம், தென் ஆற்காடு மாவட்டத்திலும் செம்பு  கனிமம், திருச்சி, செங்கை, நீலகிரி, வட ஆற்காடு, தென் ஆற்காடு மாவட்டங்களிலும் காணப்படுகின்றன.

ஜிப்சம் எனப்படும் கனிமம் திருச்சி, கோவை, தர்மபுரி, திருநெல்வேலி, விருதுநகர் மாவட்டங்களில் கிடைக்கிறது. கிராபைட் எனப்படும் கனிமம் சிவகங்கை  மாவட்டம், மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகிலும், திருநெல்வேலி மாவட்டத்தில் சிறிதளவும் கிடைக்கிறது. கிராபைட் மின் உலைகளில் மின்  கடத்தியாகவும் வெப்ப கலங்கள் தயாரிக்கவும் பயன்படுகிறது. வெர்மிகுலைட் எனப்படும் கனிமம் வட ஆற்காடு மாவட்டத்தில் கிடைக்கிறது. பழுப்பு நிலக்கரி  தென்ஆற்காடு மாவட்டம் நெய்வேலியில் கிடைக்கிறது. இது மின் உற்பத்தி மற்றும் உர தொழிலுக்கு பயன்படுகிறது.

கண்ணாடி மணல். இதிலுள்ள சிலிகா எனப்படும் தனிமம் கண்ணாடி உற்பத்திக்கு பயன்படுகிறது. இது தென் ஆற்காடு மாவட்ட கடலோரங்களிலும்,  எண்ணூருக்கு அருகிலும் கிடைக்கிறது. கரும்பாறை அந்நிய செலாவணி ஈட்டித்தருகிறது. இது உயர்ந்த அளவில் மெருகும் தன்மை கொண்டது.  கரும்பாறைகளின் மொத்த ஏற்றுமதியில் தமிழகத்தின் பங்கு 80 சதவீதமாகும். அறிவியல் முன்னேற்றம் காரணமாக நில ஆய்வாளர் துணையுடன் பல அரிய  கனிமங்கள் கண்டறிந்துள்ளனர். குறிப்பாக கிரானைட் கனிமம், கடற்கரையில் தாது மணல் கனிமங்களை வெளிநாட்டினர் கண்டுபிடித்து, அதன் மவுசு என்ன  என்பதை விளக்கினர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...