அரசு தொழில்நுட்ப தேர்வில், காப்பி அடித்ததாக கூறி, தமிழகம் முழுவதும் நுாற்றுக்கணக்கான தேர்வர்களுக்கு, இரண்டு ஆண்டுகள் தேர்வில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
அரசு தேர்வுத்துறை சார்பில், 2014 மே மாதம் தொழில்நுட்ப தேர்வுகள்
நடத்தப்பட்டன. இத்தேர்வுகளை மாநிலம் முழுவதும், 48 ஆயிரத்து 567 பேர் எழுதினர். குறிப்பாக, ஓவியத்தேர்வை சுமார், 14 ஆயிரம் பேர் எழுதியுள்ளனர்.
கோவை மாவட்டத்தில், 3,205 பேர் எழுதினர். ஓவிய தேர்வில் பலர் காப்பி அடித்துள்ளதாகவும், பலரின் ஓவியம், ஒன்றுபோல் காட்சியளிப்பதாகவும் கூறி, 100க்கும் மேற்பட்டவர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு தேர்வு எழுத தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கலையாசிரியர்கள் சங்க மாநிலத்தலைவர் ராஜ்குமார் கூறுகையில், "ஓவியத்தேர்வின் விதிமுறைகள்படி, ஒரு அறைக்கு 20 பேர் அரை வட்ட வடிவில் அமர்ந்து, மாடல் ஓவியத்தை பார்த்து வரைய வேண்டும். அரை வட்ட வடிவம் என்பதால், ஒவ்வொருவரின் ஓவியத்திலும் ஒருசில மாற்றங்கள் கோணத்திற்கு ஏற்ப இருக்கும்.
ஆனால், ஒரு அறையில் 100 பேரை அடைத்து வைத்து, தேர்வெழுத வைத்தது அரசுத் தேர்வுத்துறையின் தவறு. ஒரே கோணத்தில் அமர்ந்து, மாடல் ஓவியத்தை பார்த்து வரைபவர்களின் ஓவியங்கள், நிச்சயம் ஒன்று போல்தான் இருக்கும். இதற்கு, காப்பி அடித்தார்கள் என்று கூறுவது சரியல்ல" என்றார்.
பாதிக்கப்பட்ட ஒருவர் கூறியதாவது: ஓவியத்தை நகல் எடுத்து சமர்ப்பித்ததாக குறிப்பிட்டு, இரண்டு ஆண்டுகள், அரசு தேர்வுகள் எழுத தடைவிதித்து கடிதம் அனுப்பியுள்ளனர். மாடல் பொருட்களை வைக்க வேண்டிய இடத்தில், பொருட்களின் நகலையும், மாடல் மனிதரை நிறுத்த வேண்டிய இடத்தில் ஒரு நகல் படத்தையும் மாட்டி, கடுமையான இடநெருக்கடிக்கு, மத்தியில் தேர்வெழுத வேண்டிய சூழல் ஏற்பட்டது.
நகலை பார்த்து, படம் வரையும்போது, எவ்வித மாறுபாடுகளும் வருவதற்கு வாய்ப்புகள் இல்லை. விடைத்தாளை திருத்துபவர்கள், ஒரு அறைக்கு 20 பேர் என கணக்கிட்டு, ஓவியத்தில் வேறுபாடுகளை எதிர்பார்த்துள்ளனர். அந்த வேறுபாடு, இல்லாததால் காப்பி அடித்ததாக கூறுகின்றனர். தேர்வுத்துறையின் தவறுகளுக்கு எங்களை பலிகடா ஆக்குவதை ஏற்க முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்