அருந்ததியர் உள் இடஒதுக்கீடு தொடர்பான வழக்கு விசாரணையை, பஞ்சாப் மாநிலத்தில் அளிக்கப்பட்டு வரும் இடஒதுக்கீடு தொடர்பான வழக்குடன் இணைத்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
அதாவது, பஞ்சாப் மாநிலம் தொடர்புடைய உள் இட ஒதுக்கீடு வழக்கை ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து வரும் நிலையில், இந்த வழக்கும் அதனுடன் இணைத்து விசாரிக்கப்பட உள்ளது.
தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் அருந்ததியர்களுக்கு 3 சதவீதம் உள் ஒதுக்கீடுவழங்கும் வகையில் தமிழக அரசு 2009-ஆம் ஆண்டு இயற்றிய சட்டத்தைச் செல்லாது என அறிவிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சதீஷ் கே. அக்னிஹோத்ரி, கே.கே. சசிதரன் ஆகியோர் அடங்கி அமர்வு நான்கு வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு கடந்த ஆண்டு, அக்டோபர் 27-ஆம் தேதி உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கெளல், எம்.எம். சுந்தரேஷ் அமர்வு முன் கடந்த ஜனவரி 20-ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்தில் மாற்றி விசாரிக்க அனுமதி அளித்தது.
இந் நிலையில், உள் இடஒதுக்கீடுக்கு ஆதரவாக ஜெ. யசோதா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குரியன் ஜோசப், அமித்தவா ராய் ஆகியோர் அமர்வு முன் விசாரணைக்கு திங்கள்கிழமை வந்தது.
மனுவை ஆராய்ந்த நீதிபதிகள், உச்ச நீதிமன்றத்தில் ஏற்கெனவே விசாரிக்கப்பட்டு வரும் பஞ்சாப் மாநில இட ஒதுக்கீடு தொடர்புடைய வழக்குடன் இணைத்து விசாரிக்கவும், இது தொடர்பாக தமிழக அரசுக்கும், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமிக்கும் நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டனர்.