தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு வினியோகிக்கும் பாடப் புத்தகங்கள் விலையை 50 சதவீத்திற்கும் மேல் உயர்த்தி தமிழ்நாடு பாடநுால் மற்றும் கல்வியியல் பணிக் கழகம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனியார் ஆங்கில மீடியம் பள்ளிகளில் 15 லட்சத்திற்கும் மேல் மாணவர்கள்
படிக்கின்றனர். இவர்களுக்கான பாடப் புத்தகங்கள் தற்போது தமிழ்நாடு பாடநுால் கழகத்தால் விநியோகம் செய்யப்படுகிறது.
இக்கல்வியாண்டில் ஒன்று முதல் பிளஸ் 2 வரை பாடப் புத்தகங்களில் விலையை உயர்த்தி, திருத்தி அமைக்கப்பட்ட விலைப் பட்டியலை அனைத்து மாவட்ட மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர்களுக்கும் பள்ளிக் கல்வி செயலர் சபீதா அனுப்பி வைத்தார்.
அதில், மூலப் பொருட்கள், பேப்பர் விலை, அச்சடிப்பு கட்டணம், நிர்வாக செலவு, விற்பனை செலவு உயர்ந்ததால் இந்தாண்டு முதல் பாடப் புத்தகங்களில் விலையும் உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பெற்றோர் கூறுகையில், "புத்தகங்கள் விலையை அதிகபட்சம் ரூ.10 உயர்த்தி இருக்கலாம். ஆனால் பெரும்பாலான புத்தக விலை இருமடங்கு உயர்ந்தது அதிர்ச்சியாக உள்ளது. மாணவர்களுக்கு பல்வேறு திட்டங்களை வழங்கும் அரசு, தனியார் பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்களை சலுகை விலை அல்லது இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.
மதுரை மாவட்ட தனியார் பள்ளி தாளாளர்கள் கூட்டமைப்பு செயலாளர் செந்தில்நாதன் கூறுகையில், "முப்பருவ கல்வி முறை அமல்படுத்தப்பட்ட பின் நடுத்தர குடும்ப மாணவர்களும் தனியார் பள்ளிகளில் அதிக எண்ணிக்கையில் சேர்ந்தனர். அப்பிரிவு பெற்றோர்களுக்கு இது கூடுதல் சுமையாகவே இருக்கும்" என்றார்.