பிளஸ் 2 பொதுத்தேர்வு : மொழிப்பாட விடைத்தாள் திருத்தும் பணி நிறைவு

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் மொழிப்பாடங்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணி நிறைவு பெற்றது. பிற பாடங்களுக்கான விடைத்தாள்  திருத்தும் பணி நாளை தொடங்குகிறது. தமிழகம் மற்றும் புதுவையில் நடப்பு கல்வி ஆண்டிற்கான பிளஸ் 2
பொதுத்தேர்வு கடந்த மாதம் 5ம் தேதி தொடங்கி  31ம் தேதி வரை நடந்தது. 8 லட்சத்து 43 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் எழுதிய இந்த தேர்வின் விடைத்தாள்கள் திருத்தும் பணி மும்முரமாக  நடைபெற்று வருகிறது. முதலில் மொழிப்பாடங்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது. இப்பணி நேற்றுடன் நிறைவுபெற்றது. சில மையங்களில்  குறிப்பிட்ட தினத்திற்கு முன்னதாகவே திருத்தி முடிக்கப்பட்டது.

இதையடுத்து பிற பாடங்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணி நாளை தொடங்குகிறது. 6, 7ம் தேதி முதன்மைத் தேர்வர்கள் மற்றும் கூர்ந்தாய்வர்கள் தங்கள்  பணியை தொடங்குகிறார்கள். 8ம் தேதி உதவி தேர்வர்கள் விடைத்தாள் திருத்துகிறார்கள். விடைத்தாள் திருத்தும் மையங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ்  பாதுகாப்பு போடப்பட்டிருப்பதுடன் கண்காணிப்பு கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது. ஏப்.20ம் தேதிக்குள் விடைத்தாள்களை திருத்தி முடிக்க கல்வித்துறை முடிவு  செய்துள்ளது. ஏற்கனவே மே முதல் வாரத்தில் பிளஸ்2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என கல்வித்துறை வட்டாரம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...