14 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்!

உணவு-கூட்டுறவுத் துறை செயலர் உள்பட 14 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இதற்கான உத்தரவை தலைமைச் செயலர் கே.ஞானதேசிகன் திங்கள்கிழமை இரவு பிறப்பித்தார்.
 இதுகுறித்து அவர் வெளியிட்ட உத்தரவு: (அடைப்புக் குறிக்குள் அதிகாரிகள் முன்பு வகித்த பதவி விவரம்)
 பி.அண்ணாமலை--ஆதிதிராவிடர்-பழங்குடியினர் நலத் துறை செயலர்
(நகர்ப்புற நில உச்சவரம்பு-நகர்ப்புற நில வரி ஆணையாளர்)
 பி.சிவசங்கரன்- சமூக நலன் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை முதன்மைச் செயலர் (மாற்றுத் திறனாளிகள் நலத் துறை, ஆதி திராவிடர்-பழங்குடியினர் நலத் துறை (பொறுப்பு) முதன்மைச் செயலர்)
 முகமது நசிமுதின்- மாற்றுத் திறனாளிகள் நலத் துறை முதன்மைச் செயலர் (கூட்டுறவு-உணவுத் துறை, சமூக நலன்-சத்துணவுத் திட்டத் துறை (பொறுப்பு) செயலர்)
 குமார் ஜயந்த்- தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சித் துறைச் செயலர் (சிறு,குறு, நடுத்தரத் தொழில்கள் துறை, தொழிலாளர் நலன்-வேலைவாய்ப்பு பயிற்சித் துறை (பொறுப்பு) செயலர்)
 ஜக் மோகன் சிங் ராஜூ- சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் துறை முதன்மைச் செயலாளர் (சிறு தொழில்கள் வளர்ச்சிக் கழகத்தின் நிர்வாக இயக்குநர்),
 சிவதாஸ் மீனா- கூட்டுறவு, உணவு, நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலாளர் (அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் முன்னாள் நிர்வாகி)
 அணில் மேஷ்ராம்- மாநிலத் திட்ட ஆணையத்தின் உறுப்பினர் செயலாளர் (தமிழ்நாடு சாலை பகுதி மேம்பாட்டுத் திட்ட இயக்குநர்),
 ஆர்.லால்வேனா- சமூக பாதுகாப்பு இயக்குநர் (வேறு மாநில அரசுப் பணியில் இருந்து திரும்பியவர்),
 எஸ்.மதுமதி- தொழில்நுட்ப கல்வி இயக்குநர் (தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர்)
 ஷம்பு கல்லோலிகர்- தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநர் (தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர்)
 எஸ்.மலர்விழி- சிவகங்கை மாவட்ட ஆட்சியர்
 (வணிகவரிகள் துறை இணை ஆணையாளர்)
 எஸ்.ஏ.ராமன்- நில நிர்வாகத் துறை இணை ஆணையாளர் (முதல்வர் அலுவலக துணைச் செயலாளர்).
 எஸ்.சுவர்ணா- தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர்-நிர்வாக இயக்குநர் (மத்திய அரசுப் பணியில் இருந்து திரும்பியவர்), கே.பாலச்சந்திரன்- தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் (காதி-கிராமத் தொழில்கள் வாரியத்தின் முதன்மை செயல் அலுவலர்), தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நிர்வாக இயக்குநராக இருந்த எம்.சந்திரசேகரனுக்கு பொறுப்பு ஏதும் வழங்கப்படவில்லை

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...