ஆங்கிலவழி பள்ளிகள் நடத்துவதற்கு அனுமதி வழங்கும்படி, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, கர்நாடக உயர் நீதிமன்றம் அந்த உத்தரவை உறுதிபடுத்தி, மாநிலத்தில்,
ஆங்கிலத்தை பாடமொழியாக வைத்து நடத்த, அனுமதி கோரியுள்ள பள்ளிகளுக்கு, அனுமதி வழங்கும்படி உத்தரவிட்டது.
ஆனால், மாநில ஆரம்ப கல்வித்துறை, அனுமதி வழங்காமல் இழுத்தடித்து வருகிறது. கர்நாடக அரசு உதவி பெறாத பள்ளிகள் நிர்வாக அமைப்பு (கே.யூ.எஸ்.எம்.ஏ., ) மற்றும் கர்நாடக மாநில மைனாரிட்டி இன்ஸ்டிடியூட் மானேஜ்மென்ட் பெடரேஷன் (கே.எஸ்.எம்.ஐ.எம்.எப்.,) அமைப்புகள், மீண்டும், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன.
இதுகுறித்து விசாரணை நடத்த நீதிபதிகள் குமார், சீனிவாச கவுடா ஆகியோர் முன்வந்தபோது,
கர்நாடக அரசு சார்பில், தாக்கல் செய்யப்பட்ட மனுவில், கே.எஸ்.எம்.ஐ.எம்.எப்., அமைப்பின் கீழ், தார்வாட் மற்றும் கலபுரகி டிவிஷன்களிலிருந்து, பைல்கள் இன்னும் வராததால், சற்றுகால அவகாசம் அளிக்கும்படி கேட்டு கொள்ளப்பட்டது.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், மாநிலத்தில் ஆங்கில பள்ளிகள் நடத்த அனுமதி கேட்டவர்களுக்கு ஒரு வாரத்திற்குள் அனுமதி வழங்கப்பட வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.