இரு சக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிவது கட்டாயம் என நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு நடைமுறைக்கு வர இன்னும் ஒரு நாளே உள்ளதால், தலைக்கவசத்துக்கான தேவை அதிகரித்துள்ளது. இதனால்,
அவற்றின் விலை 15 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் புதன்கிழமை (ஜூலை 1) முதல் இரு சக்கர வாகன ஓட்டிகள், பின்புறம் அமர்ந்து செல்வோர் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 8-ஆம் தேதி உத்தரவிட்டது. இதையடுத்து தமிழகத்தில் தலைக்கவசம் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது.
சென்னையில் ஜெனரல் பீட்டர்ஸ் சாலை, ஆயிரம் விளக்கு, தியாகராய நகர் உள்பட பல்வேறு இடங்களில் உள்ள கடைகளில் தலைக்கவசத்தின் விற்பனை இருமடங்காக அதிகரித்துள்ளது.
குவியும் ஆர்டர்கள்: இந்தநிலையில், தலைக்கவசத்துக்கான தேவை தற்போது தொடர்ந்து அதிகரித்து வருவதால் அவற்றின் விலை உயர்ந்து வருவதாக தலைக்கவச மொத்த வியாபாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து சென்னை பாடியைச் சேர்ந்த அப்துல் ரகுமான், ஆயிரம் விளக்கு பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி உள்ளிட்ட தலைக்கவச மொத்த வியாபாரிகள் கூறியது:
கடந்த சில வாரங்களில் தலைக்கவசத்துக்கான தேவை வெகுவாக அதிகரித்துள்ளது.
தற்போது, நீதிமன்றம் விதித்துள்ள கெடு முடிவடைய உள்ளதால் விற்பனை இரண்டு மடங்கைத் தாண்டிவிட்டது. வாடிக்கையாளர்களின் கூட்டத்தை தவிர்ப்பதற்காக வழக்கத்தைக் காட்டிலும் சற்று முன்னதாகவே கடையைத் திறந்து விடுகிறோம்.
சில நிறுவனங்களில் ஊழியர்கள் தலைக்கவசத்தை ஒட்டுமொத்தமாக கொள்முதல் செய்கின்றனர்.
வாகன ஓட்டிகள் விரும்பும் வகையிலான தலைக்கவசங்கள் இருப்பு இல்லாவிடிலும் தில்லி, மும்பை,கொல்கத்தா போன்ற நகரங்களில் ஆர்டர் செய்து உடனுக்குடன் அவற்றை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறோம்.
விலை அதிகரித்தது: தேவையின் முக்கியத்துவம் கருதி வழக்கத்தைக் காட்டிலும் விரைவாக இவற்றை எடுத்து வருவதால் போக்குவரத்துச் செலவு அதிகரித்து விட்டது. இதனால், தலைக்கவசத்தின் விலை 10 முதல் 15 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. உதாரணமாக கடந்த வாரம் ரூ.450 முதல் ரூ.700 வரை விற்கப்பட்ட தலைக்கவசங்கள், தற்போது ரூ.520 முதல் ரூ.800 வரை விற்கப்படுகின்றன.
தலைக்கவசத்தைப் பொருத்தவரை தலையை மட்டும் மூடும் "ஓபன் ஃபேஸ்', தலை, முகத்தை முழுவதுமாக மூடும் "ஃபுல்பேஸ்', தேவைக்கேற்றவாறு சரிசெய்துகொள்ளும் "மாடுயூலர்', முன்புறத்தை மடக்கி விரிக்கும் "ஃபிலிப்' என பல்வேறு வகைகள் உள்ளன.
இவற்றில் தூசி, பூச்சிகள் ஆகியவற்றிலிருந்து கண்களை பாதுகாக்கக் கூடியதும், உலக அளவில் பெரும்பாலான வாகன ஓட்டிகளால் பயன்படுத்தக் கூடியதுமான ஃபுல் பேஸ் வகை தலைக்கவசத்தையே 10-ல் 7 பேர் தேர்வு செய்கின்றனர். அதே நேரத்தில் பெண்களில் 10-க்கு 5 பேர் தலைமுடி, காதணி போன்றவை சிக்குவது உள்ளிட்ட காரணங்களுக்காக "ஆஃப் பேஸ்' எனப்படும் தலையை மட்டும் மறைக்கக் கூடிய தலைக்கவசங்களை விரும்பி வாங்குகின்றனர்.
ரேஸ் வகை மோட்டார் சைக்கிள்கள் வைத்திருக்கும் இளைஞர்கள் சிலர் சர்வதேச தரத்தில் வடிவமைக்கப்பட்ட ரூ.5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விலையிலான தலைக்கவசங்களையும் வாங்குகின்றனர்.
போலீஸாரின் கட்டுப்பாடு: ஐ.எஸ்.ஐ. முத்திரையிடப்பட்ட தலைக்கவசங்களை அணிய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தாலும், சிலர் தலைக்கவசம் தொடர்பான கெடுபிடிகள் சிறிது காலத்துக்கு மட்டுமே இருக்கும். எனவே, ரூ.350 முதல் ரூ.500 விலையிலான சாதாரண தலைக்கவசங்களை கொடுங்கள் என்று கூறி வாங்கிச் செல்கின்றனர்.
இருப்பினும், ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் நீதிமன்ற உத்தரவு, போக்குவரத்துப் போலீஸாரின் நடவடிக்கைகள், பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு போன்ற காரணங்களால் தலைக்கவசம் அணியும் வாகன ஓட்டிகளின் எண்ணிக்கை பெருகி வருகிறது என்றனர்.