டெங்கு’ காய்ச்சல் பரவுவதை தடுக்கும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, நிலவேம்பு கசாயத்தை அனைத்து பள்ளி மாணவ - மாணவிகளுக்கும் வழங்க வேண்டும் என, மாநில நகராட்சி
நிர்வாகத்துறை இயக்குனர் பிரகாஷ் உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து திண்டுக்கல் மேட்டுப்பட்டி நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் நேற்று சிறப்பு முகாம் நடந்தது. குடிநீர் பற்றாக்குறையினால் மக்கள் அவதிப்படும்போது, டெங்கு காய்ச்சல் மிக விரைவாக பரவும். இதை தடுக்கும் நோக்கில், தமிழகத்தில் அனைத்து உள்ளாட்சி மன்றங்களிலும் நிலவேம்பு கசாயத்தை பள்ளி மாணவ - மாணவிகளுக்கு வழங்க வேண்டும்.
முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள ஜூலை மாதத்திற்கு முன்பாகவே கசாயம் வழங்கி முடித்திருக்க வேண்டும் என, மாநில நகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து திண்டுக்கல் மாநகராட்சி ஆணையாளர் ராஜன், சுகாதார அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். நகர்நல அலுவலர் டாக்டர் அனிதா மேற்பார்வையில், சுகாதார ஆய்வாளர்கள் 16 பேர் அடங்கிய குழு சிறப்பு முகாம்களில் பங்கேற்றனர். பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களோடு சேர்ந்து மாணவ - மாணவிகளுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.
மாநகராட்சி பகுதியில் உள்ள 75 பள்ளிகளில் (அரசு மற்றும் தனியார் பள்ளிகள்) இந்த முகாம்கள் இந்த மாதம் முழுவதும் நடைபெற உள்ளது.ஏற்கனவே கடந்த வாரங்களில் 5017 மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டுள்ளது. வரும் 2 வாரங்களில் 33 ஆயிரம் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது. இதில், தலைமையாசிரியை தெய்வானை, சுகாதார ஆய்வாளர்கள், பாலமுருகன், லாவண்யா, கேசவன் பங்கேற்றனர்.
நகர்நல அலுவலர் அனிதா கூறியதாவது: ‘டெங்கு’வால் பெரும்பாலும் பாதிக்கப்படுவது பள்ளி மாணவர்கள்தான். அதனால், ஜூலைக்கு முன்பே நிலவேம்பு கசாயத்தை குடிக்கும் சிறப்பு முகாம்களை முடிக்க உத்தரவிட்டுள்ளோம். நன்கு கொதிக்கவைக்கப்பட்டு சற்று குடிக்கக்கூடிய வெதுவெதுப்பான சூட்டில் ஒவ்வொரு மாணவருக்கும் 15 மில்லி கசாயத்தை தருகிறோம். இதனால், மாணவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். நோய்கள் அண்டாது. இதை பெற்றோரும் பின்பற்ற அறிவுறுத்தியுள்ளோம், என்றார்.