நீங்கள் தேர்வுசெய்யும் படிப்பின் மீதான உங்களின் ஆர்வம் மற்றும் திதிறனை செலுத்துங்கள் !

உங்களுக்காக சில ‘டிப்ஸ்’ இங்கே...

கவலையை களையெடுங்கள்

முதலில் பாடத்தை தேர்வு செய்வதில் உள்ள கவலையையும், பதட்டத்தையும் ஒரு மூலையில் வைத்துவிட்டு, வாசிப்பை தொடருங்கள்!


பலர், படித்தவுடன் உடனடியாக பணி வாய்ப்புகள் கிடைக்கும் படிப்பையே தேர்வுசெய்ய விரும்புகிறார்கள். நீங்கள் அதிக மதிப்பெண் பெற்றவராக இருக்கலாம் அல்லது சுமாரான மதிப்பெண் பெற்றவராக இருக்கலாம். உங்கள் எதிர்காலத்திற்காக, நீங்கள் எதை தேர்வு செய்கிறீர்கள் மற்றும் அந்த வாய்ப்பை எவ்வாறு பயன்படுத்திக் கொள்கிறீர்கள் என்பதுதான் முக்கியமே தவிர, கடந்தகால சங்கடங்களை நினைத்து கவலை கொள்ள வேண்டாம்.

உச்சத்தை அடைய எப்போதும் தயாராக இருங்கள். உங்கள் விருப்பம் மற்றும் தேவையைப் பொறுத்து, நல்ல கல்லூரியில், சிறப்பான படிப்பை தேர்வுசெய்து கடின முயற்சி செய்து படியுங்கள். நீங்கள் தேர்வுசெய்யும் படிப்பின் மீதான உங்களின் ஆர்வம் மற்றும் திறமை, உங்களின் பொருளாதார நிலை மற்றும் உங்களின் மனப்பாங்கு ஆகியவற்றை கவனத்தில் கொண்டு, படிப்பை தேர்வு செய்யுங்கள்.

மேல்நிலை பள்ளிப் படிப்பிற்கு பிறகு, பல்வேறான படிப்புகளைப் பற்றிய வழிகாட்டுதல்கள் இனி:

அறிவியல், வணிகம் மற்றும் கலைப் பிரிவு

வணிகம், கலை மற்றும் அறிவியல் ஆகியப் பிரிவுகளில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்து படித்த நீங்கள், உங்களின் எதிர்காலப் படிப்பை தேர்வு செய்வது குறித்த போதுமான விழிப்புணர்வு பெறுவது அவசியம். ஒவ்வொரு பிரிவு மாணவருக்கும், ஏராளமான வாய்ப்புகள் உள்ளன என்பதை உணருங்கள். ஆனால், லட்சியத்தை அடைவது குறித்த சரியான மனப்பாங்குதான் முக்கியத் தேவை.

நீங்கள் நல்ல மதிப்பெண் பெற்றிருந்தால், உங்களுக்கு விருப்பமான படிப்பில் விரைவான சேர்க்கைப் பெறுவீர்கள். அறிவியல் பிரிவை படித்தவர்களுக்கு முக்கியமாக, பொறியியல் மற்றும் மருத்துவ அறிவியல் பிரிவுகளில் நல்ல வாய்ப்புகள் உள்ளன. ஆனால், அப்படிப்புகளில் சேர்வதற்கு, நீங்கள் தேர்வு செய்யும் கல்லூரி முக்கியமானதாகும். தேசிய அளவில் உள்ள கல்வி நிறுவனங்களில் சேர, அதற்குரிய நுழைவுத்தேர்வுகளை எழுதியிருப்பதும் முக்கியமான அம்சங்களில் ஒன்றாகும்.

கலை மற்றும் வணிகப் பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கும், பட்டப் படிப்பு மற்றும் டிப்ளமோ படிப்புகளின் வாயிலாக பெரியளவிலான வாய்ப்புகள் உள்ளன. நீங்கள் என்ன படிப்பை படித்தாலும், பல நல்ல வேலை வாய்ப்புகளை வழங்கும் போட்டித் தேர்வுகளை எழுதுவது சிறந்தது. உங்களின் படிப்பைத் தேர்வு செய்கையில், எதிர்காலத்தை மனதில் வைத்தே செயல்படவும். மேலும், எங்கே அதிக வாய்ப்புகளும், வளர்ச்சியும் உள்ளன என்பதை தொடர்ந்து ஆய்வு செய்து அறியுங்கள்...

அறிவியல் பிரிவு மாணவர்களுக்கான சில முக்கிய படிப்புகள்

எம்.பி.பி.எஸ்.,
பி.டி.எஸ்.,
பி.வி.எஸ்சி., (கால்நடை அறிவியல்)
பி.பார்ம்.,
பி.பி.டி., (பிசியோதெரபி)
பி.எச்.எம்.எஸ்., (ஹோமியோபதி)
பி.ஏ.எம்.எஸ்., (ஆயுர்வேதா)
நர்சிங்
பி.எஸ்சி., ஆப்டோமெட்ரி
பி.எஸ்சி., இமேஜிங் டெக்னாலஜி
பி.எஸ்சி., துணைநிலை மருத்துவ அறிவியல்கள்.

இவைதவிர, கணிதம், இயற்பியல், வேதியியல், பயோகெமிஸ்ட்ரி, பயோமெடிக்கல், தாவரவியல், கணினி அறிவியல், உணவு தொழில்நுட்பம், மண்ணியல், ஹோம் சயின்ஸ், மைக்ரோபயாலஜி, பாலிமர் சயின்ஸ், புள்ளியியல், நியூட்ரிஷன், சுற்றுச்சூழல் படிப்புகள், வேளாண் படிப்பு, பால்பண்ணைத் தொழில் மற்றும் கோழி வளர்ப்பு ஆகியவற்றில் பி.எஸ்சி., படிப்பு மேற்கொள்ளலாம்.

பொறியியல் துறை படிப்புகள்

திறமையான மாணவர்களுக்கு, பொறியியல் என்பது பிரகாசமான, எப்போதும் பணி வாய்ப்புகளை வழங்கும் பசுமையான துறையாகும். ஆனால், பொறியியல் படிப்பில் சேரும் முன்னதாக, சம்பந்தப்பட்ட கல்லூரியின் அங்கீகாரம், தரம் குறித்து நன்கு ஆய்வு செய்வது முக்கியம்.

கணிப்பொறி அறிவியல்
எலக்ட்ரிகல் இன்ஜினியரிங்
எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்
மெக்கானிக்கல் இன்ஜினியரிங்
சிவில் இன்ஜினியரிங்
வேளாண் இன்ஜினியரிங்
ஆர்கிடெக்சர்
பயோமெடிக்கல் இன்ஜினியரிங்
பயோடெக்னாலஜி (ஆராய்ச்சியில் உங்களுக்கு ஆர்வம் இருந்தால்)
செராமிக் தொழில்நுட்பம்
கெமிக்கல் இன்ஜினியரிங்
மரைன் இன்ஜினியரிங்
மெட்டலர்ஜிக்கல் இன்ஜினியரிங்
மைனிங் இன்ஜினியரிங்
பெட்ரோலியம் இன்ஜினியரிங்
பிளாஸ்டிக் தொழில்நுட்பம்
பாலிமர் இன்ஜினியரிங்
பேஷன் தொழில்நுட்பம்
ஸ்பேஸ் தொழில்நுட்பம்
டெக்ஸ்டைல் தொழில்துறை

போன்றவை குறிப்பிடத்தக்கவை.

பொறியியல் முடித்த பட்டதாரிகளுக்கு, பொதுத்துறை நிறுவனங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறை பணிகள், ஆசிரியர் பணி, நல்ல மதிப்புள்ள தனியார் துறைகள், சிவில் சர்வீஸ், மாநில பொறியியல் துறை பணிகள், எம்.பி.ஏ., படிப்பு, வங்கிப் பணிகள், பாதுகாப்புத் துறை பணிகள் ஆகிய ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. GRE, GMAT தேர்வுகளின் மூலமாக வெளிநாட்டில் மேற்படிப்பு வாய்ப்பையும் பெறலாம்.

இந்திய பொறியியல் சேவைகள்(IES) அமைப்பானது, இந்திய ரயில்வே, மத்திய பொறியியல் பணிகள், டெலிகம்யூனிகேஷன் துறை, ராணுவ பொறியியல் சேவைகள் மற்றும் மத்திய குடிநீர் சேவைகள் ஆகிய பிரிவுகளில் பல நல்ல பணி வாய்ப்புகளை, துறை சார்ந்த பட்டதாரிகளுக்கு அளிக்கின்றன. இத்தகைய பணி வாய்ப்புகளைப் பெற, யு.பி.எஸ்.சி., நடத்தும் பொறியியல் சேவைகள் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

எஅகூஉ தேர்வில் தேர்ச்சி பெறுவதன் மூலம், பொதுத்துறை பணி வாய்ப்புகள், சீனியர் புராஜெக்ட் அசோசியேட், கற்பித்தல் அசைன்மென்ட், சீனியர் மற்றும் ஜுனியர் ரிசர்ச் பெல்லோ, ரிசர்ச் அசோசியேட்ஸ், சயின்டிஸ்ட், ரிசர்ச் அன்ட் டெவலப்மென்ட் விங்க் ஆகிய வாய்ப்புகளைப் பெற முடியும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...