ஆனால் இன்றைய சூழலில் மாணவர்களை நாம் அப்படி வளரவிடுவதில்லை. வெறும் மதிப்பெண்கள் மட்டுமே வாழ்க்கை என்று தவறாக எண்ணிக்கொண்டு, மதிப்பெண்கள் எடுக்கிற எந்திரமாக
மாணவர்களை மாற்ற நினைக்கிறோம். மாணவர்களுக்கும் மனம் இருக்கிறது. அந்த பிஞ்சுக்குழந்தைகளை படி படி என்று வெற்று மனப்பாடம் செய்யும் போக்கினை ஒவ்வொரு பெற்றோர்களும் மாற்றிக்கொள்ள வேண்டும். எந்த ஒரு படிப்பாக இருந்தாலும் சரி அதனைப்புரிந்து கொண்டு படிக்கிறபோது அதன் வெற்றியே தனி!
வெறும் மதிப்பெண்களை மட்டும் பெற்று உயர்ந்த நிலையினை அடைந்தவர்கள் தொடர்ந்து அந்த நிலையில் நீடிக்காததற்கு காரணம் வெற்று மனப்பாடமே. மதிப்பெண்கள் மட்டும்தான் வாழ்க்கை என்று அவர்களது ஆழ்மனதில் பதிய வைக்கப்படுகிற போக்கு ஆரோக்கியமானதல்ல. ஒரு காலகட்டத்தில் வேலை,குடும்பம் என்று வருகிற போது அவர்களால் இந்த சமூகத்தினை சந்திக்க இயலாமல் போகிறது.
தனக்கு மேலே இருக்கிற அதிகாரிகள் வேலை சொல்கிற போதும், தன்னிடம் இருக்கும் குறைகளை சுட்டிக்காட்டுகிற போதும் அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியாமல் போய்விடுகிறது. மனைவியோடு சின்னச்சின்ன பிணக்குகள் வந்தாலும்,மற்ற உறவுகளில் சிறு சிறு விரிசல்கள் வந்தாலும் சமாளிக்கத்தெரியாமல் தற்கொலை செய்துகொள்கிறவர்கள் அதிகம். இவர்களில் பெரும்பாலானவர்கள் வாழ்க்கைபற்றிய எதையுமே கற்றுக்கொள்ளாமல் வெறும் மதிப்பெண்களே வாழ்க்கை என்று வளர்ந்தவர்களாக இருப்பார்கள்.
மதிப்பெண்கள் எடுக்கக்கூடாது என்றோ அதற்காக உழைக்கக்கூடாது என்றோ நாம் வாதிடவில்லை. மதிப்பெண்கள் மட்டும்தான் வாழ்க்கை என்று மாணவர்களை வளர்த்துவிடக்கூடாது என்றுதான் வலியுறுத்துகிறோம். மாணவர்களுக்கு பள்ளிப்பாடங்களைக் கடந்து வாழ்க்கை நெறிமுறைகளையும் வாழ்வில் ஏற்படும் பல்வேறு சூழ்நிலைகளைச் சமாளிக்கக்கூடிய ஆற்றலையும் கற்றுத்தரவேண்டியது ஆசிரியரின் கடமை. பெற்றோர்கள் இதனை மனதினில் கொண்டு ஆசிரியர்களை மதிப்பெண்கள் எடுக்க வைக்கிற மார்க்ஸ் மேக்கராக இயங்க வற்புறுத்தக்கூடாது. மாறாக நல்ல விசயங்களைக் கற்றுக்கொடுக்கிற குருவாக இயங்கவிடவேண்டும்.
எந்த பள்ளியில் புரியும்படி படிக்கவைக்கிறார்கள், மதிப்பெண்களோடு வாழும் கலையை யார் கற்றுக்கொடுக்கிறார்கள் என்பதை அறிந்து அந்தப்பள்ளியில் குழந்தைகளை சேர்ப்பது பெற்றோர்களின் கடமை.
நமது பண்பாட்டையும் கலாச்சாரத்தையும், ஒழுக்கநெறிகளையும், அறக்கருத்துக்களையும், அறிவையும் வளர்ப்பதற்காக உருவாக்கப்பட்ட கல்விநிலையங்கள் இன்றைக்கு பாடங்களை புரியும்படி படிக்கவைக்காமல் வயிறுநிறைய சாப்பிடவைத்து வாந்தி எடுக்கவைப்பது போல வெற்று மனப்பாடம் செய்து அதிக மதிப்பெண்கள் எடுக்க வைக்கிற தொழிற்சாலைகளாக மாறிக்கொண்டிருக்கின்றன. இதனை மாற்றுகின்ற பொறுப்பு அனைத்து பெற்றொர்களுக்கும் உண்டு. இதை நீங்கள் புரிந்துகொண்டால் நிறுவனங்கள் புரிந்து கொள்ளும், நிறுவனங்கள் புரிந்துகொண்டால் ஆசிரியர்கள் புரிந்துகொள்வார்கள் ஆசிரியர்கள் புரிந்துகொண்டால் அகிலமே மாறிவிடும். ஆதலால் பெற்றோர்களே புரிந்து கொள்வீர்.
-ஞானகுரு.