அழகப்பா பல்கலை தொலை நிலை கல்வி தேர்வு முடிவுகள்

காரைக்குடி அழகப்பா பல்கலை தொலைநிலை கல்வி மையத்தில் மே 2015க்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
இளநிலை பிரிவு:
பி.காம்., (நேரடி இரண்டாம் ஆண்டு, சி.ஏ.,
சி.ஏ., நேரடி இரண்டாம் ஆண்டு), பி.பி.ஏ., மற்றும் பி.பி.ஏ., நேரடி இரண்டாம் ஆண்டு (வங்கியியல், சி.எஸ்.), பி.ஏ., (வரலாறு), பி.எல்.ஐ.எஸ்.சி., பி.சி.ஏ., மற்றும் பி.சி.ஏ.,(நேரடி இரண்டாம் ஆண்டு), பி.எஸ்சி., (தகவல் தொழில் நுட்பம், தகவல் தொழில் நுட்பம் நேரடி இரண்டாம் ஆண்டு, கணினி அறிவியல், கணினி அறிவியல் நேரடி இரண்டாம் ஆண்டு, சைக்காலஜி).

முதுநிலை பிரிவு:

எம்.பி.ஏ., (பொது - செமஸ்டர் அன்ட் நான் செமஸ்டர், மனிதவள மேலாண்மை, மருத்துவ மேலாண்மை, திட்ட மேலாண்மை, தொழில்நுட்ப மேலாண்மை, லாஜிஸ்டிக் மேலாண்மை, சில்லரை வணிக மேலாண்மை, சுற்றுலா, முதலீட்டு மேலாண்மை, கல்வியில் மேலாண்மை, எம்.பி.ஏ., 5 ஆண்டு, எம்.ஏ., (கல்வியியல், குழந்தை பராமரிப்பு மற்றும் கல்வியியல், மனிதவள மேலாண்மை மற்றும் தொழில் உறவியல், மனிதவள மேலாண்மை மற்றும் தொழில் உறவியல் நேரடி இரண்டாம் ஆண்டு), எம்.காம் (நிதி மற்றும் கட்டுப்பாடு), முதுகலை (இதழியல் மற்றும் மக்கள் தகவல் தொடர்பு), எம்.எஸ்சி., (இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல், முதுகலை அறிவியல் தகவல் தொழில் நுட்பம், மென்பொருள் பொருளியல், சமூக பணி), எம்.எல்.ஐ.எஸ்.,பி.ஜி., டிப்ளமோ பிரிவில் பி.ஜி.டி., (பி.எம். அன்ட் ஐ.ஆர்., ஹெச்.ஆர்.எம்.,, வணிக மேலாண்மை), பி.ஜி.டி.சி.ஏ., பி.ஜி.டி., லேன், சான்றிதழ் பிரிவில் சி.எல்.ஐ.எஸ்., ஆகியவற்றின் தேர்வு முடிவுகள் www.alagappauniv-ersity.ac.in., www.kalvimalar.com  இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

முடிவு வெளியான 10 நாட்களுக்குள் (18.7.2015) மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கலாம். பல்கலை கழக இணையதளத்தின் மூலம் விண்ணப்பத்தை, பதிவிறக்கம் செய்து, விண்ணப்பத்துடன் மறுமதிப்பீட்டு கட்டணமாக பாடம் ஒன்றுக்கு ரூ.500 வரைவோலையை (பதிவாளர், அழகப்பா பல்கலை கழகம், காரைக்குடி) என்ற முகவரிக்கு எடுத்து, தேர்வுப்பிரிவில் விண்ணப்பிக்கவேண்டும் என, தேர்வாணையர் உதயசூரியன் தெரிவித்தார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...