தமிழகத்தில் புதிய மருத்துவக் கல்லூரி!

தொடர்ந்து 2வது நாளாக நடந்துவரும் தமிழக சட்டசபை கூட்டத்தில் இன்று, புதுக்கோட்டையில் ஒரு அரசு மருத்துவக் கல்லூரியும் மற்றும் தென் தமிழகத்தில் ரூபாய் 50 கோடியில் பல் மருத்துவக் கல்லூரியும்  அமைக்கப்படும் என்று
தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயல்லிதா அறிக்கை வெளியிட்டார்.

மேலும் அறிக்கையில்:
சிவகங்கை, திருவண்ணாமலை மற்றும் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டம் ஆகிய இடங்களில் 100 மாணவர்கள் சேர்க்கையுடன் 3 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே செயல்பட்டு வரும் 7 அரசு மருத்துவக் கல்லூரிகளில், கூடுதலாக 410 மருத்துவ மாணவர்கள் சேர்க்கை மற்றும் 710 மருத்துவ பட்டப் படிப்பு இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.அரசு பல் மருத்துவக் கல்லூரியில் முதுகலை மாணவர்கள் சேர்க்கை 35லிருந்து 58ஆக தரம் உயர்த்தப்பட்டுள்ளது என்று அறிக்கையில் கூறப்பட்டிருந்த்து.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...