தேர்வு நேரத்தில் பயிற்சி ! மாணவர்கள் பாதிப்பு!

அரசு பள்ளிகளில் முதல்பருவத்தேர்வு துவங்கும் நேரத்தில், ஆசிரியர்களுக்கு தொடர்ச்சியாக பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால், மாணவ, மாணவியர் தேர்வுக்கு தயாராவதில் சிக்கல் உருவாகியுள்ளது. தமிழகத்தில்,பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்புக்கு, வரும், 12ம் தேதி முதல்
காலாண்டு தேர்வு துவங்குகிறது.
ஒன்றாம் வகுப்பு முதல், 9ம் வகுப்பு வரை, செப்.,19ம் தேதி முதல் தேர்வு நடத்தப்பட உள்ளது.


இந்நிலையில், அனைவருக்கும் கல்வி திட்டத்தில், தொடர்ச்சியாக ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான ஆசிரியர்களுக்கு, செப்டம்பர், 11,12, 14 ஆகிய தேதிகளில் கணிதப்பெட்டகம் குறித்த முதல்கட்ட பயிற்சியும், செப்.,15, 16, 18 ஆகிய தேதிகளில் இரண்டாம் கட்ட பயிற்சியும் நடத்தப்பட உள்ளது. மேலும், செப்., 15, 16, 18 தேதிகளில் அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களுக்கும், செப்டம்பர் 14, 19 தேதிகளில், ஆங்கில பட்டதாரி ஆசிரியர்களுக்கும் பயிற்சியளிக்கப்படுகிறது. ஒட்டுமொத்தமாக ஒரே சமயத்திலும், அதிலும் தேர்வு சமயத்தில், பயிற்சி வழங்கப்படுவதால், பள்ளியை ஒன்றிரண்டு ஆசிரியர்களை கொண்டு, நடத்த வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் கூறியதாவது: அனைவருக்கும் கல்வி திட்டத்தில், ஆண்டுக்கு, 20 நாள் வரை, பயிற்சியளிக்கப்படுகிறது. இதை அவசரஅவசரமாக, இப்போதே தர வேண்டிய அவசியம் என்னவென புரியவில்லை.


தனித்தனியே பயிற்சி நடக்கும் போது, பள்ளியிலிருந்து, ஒன்றிரண்டு ஆசிரியர்கள் மட்டுமே குறைவர். அதனால், பள்ளியை நடத்துவதில் சிக்கல் இருக்காது. ஆனால், பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் என ஒட்டுமொத்தமாக பயிற்சியளிக்கும் போது, பள்ளியை ஒன்றிரண்டு ஆசிரியர்களை வைத்து நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அதிலும், தேர்வு சமயத்தில் இதுபோன்று நடத்துவதால், பள்ளி பணி பாதிக்கப்படுகிறது. பயிற்சிகளை, தேர்வு முடிந்தபின் நடத்துவது பள்ளிக்கும், மாணவ, மாணவியருக்கும் நல்லது. இவ்வாறு அவர் கூறினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...