தரம் உயர்ந்த பள்ளியில் வகுப்பறை பற்றாக்குறை


வால்பாறை: வாட்டர்பாஸ் நடுநிலைப்பள்ளி தரம் உயர்த்தப்பட்ட நிலையில், மாணவர்களை
சேர்க்க ஓராண்டு காலஅவகாசம் வேண்டும் என்று பள்ளி நிர்வாகம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
வால்பாறை அடுத்துள்ளது வாட்டர்பால் எஸ்டேட் ஊரட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி. இந்தப்பள்ளியில், 203 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்தப்பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் பள்ளி மேலாண்மை குழு, பெற்றோர் ஆசிரியர் கழகம் ஆகியவை இணைந்து, பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளருக்கு அனுப்பியுள்ள மனுவில் ’தொடக்க கல்வித்துறையின் கீழ் இயங்கி வந்த வாட்டர்பால் கிழக்கு அரசு நடுநிலைப்பள்ளி, பள்ளி கல்வித்துறையின் கீழ் அரசு உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தியதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், வகுப்பறை பற்றாக்குறையால் இந்த கல்வியாண்டில், 9ம் வகுப்பு மாணவர்களை சேர்க்க இயலாத நிலை உள்ளது. எனவே அடுத்த கல்வியாண்டு முதல் புதிய மாணவர்கள் சேர்க்கை துவங்க அரசு அனுமதி வழங்க வேண்டும்’ கூறியுள்ளனர்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...