ஜாக்டோவின் முடிவு கோரிக்கையை வென்றெடுப்பதற்கான வியூகமாய் தெரியவில்லை. அடையாள வேலைநிறுத்தம் செய்த பிறகு தொடர்மறியல் போராட்டம் ????? அதுவும் மாவட்ட தலைநகரில்.....
ஜாக்டோ உயர்மட்டப் பொறுப்பாளர்களே,
நாம் உண்மையில் போராடப் போகிறோமா போராடுவது போல் பாவனை செயயப் போகிறோமா?
இப்படிப்பட்ட போராட்டங்களை அறிவிப்பதற்கு பதிலாக விரைவில் தொடர் வேலைநிறுத்தம் என அமைதியாக மிரட்டிக் கொண்டு (மட்டும்) இருக்கலாம்.
தேர்தல் புறக்கணிப்பு என அச்சுறுத்திக் கொண்டாவது இருக்கலாம்.
போராட்டங்கள் அரசுக்கு நெருக்கடியூட்டுவதாய் அமைய வேண்டுமே தவிர ஆசுவாசப் படுத்துவதாய் அமைக்கக் கூடாது.
போராட்டங்களின் தொடர்ச்சி ஆசிரியர்களை உணர்வூட்டி உத்வேகப்படுத்த வேண்டுமே தவிர உணர்வுகளை தொய்வடையச் செய்து உளைச்சல் ஏற்படுத்தக் கூடாது.
குறைந்தபட்சம் மாநிலத் தலைநகரில் தொடர் மறியல் என்றால் கூட ஊடக கவனத்தையும் பொதுஜன விவாதங்களையும் ஈர்க்க முடியும். மாநில உண்ணாவிரதம், அடையாள வேலைநிறுத்தம் என மாநில அளவிற்கு உருமாற்றப்பபட்ட போராட்ட வீச்சை மாவட்டத்திற்கு மடைமாற்றுவதேனோ?
பத்து பேர் நிற்கையில் கோரிக்கை வைப்பதும் நூறு பேர் நிற்கையில் குரல் எழுப்புவதும் ஆயிரம் பேர் நிற்கையில் ஆர்ப்பரித்து எழுவதும் பத்தாயிரம் பேர் நிற்கையில் முன்னகர்ந்து முண்டா தட்டுவதும்
லட்சம் பேர் பின்நிற்கையில் லட்சியத்தை அடையும்வரை அனைத்தையும் ஸ்தம்பிக்கச் செய்வதுமே
போராட்ட குணாம்சம்.
(அளவு மாற குணமும் மாறும்)
தீப்பொறியை பெருந்தீயாய் மாற்றாமல் கனன்று நிற்கும் கனலை கரியாக்கிடாதீர்.
மீளமுடியாத போராட்ட பயணத்தில் ஒற்றுமையே ஆயுதமாய் நம்மோடு நிற்கும் ஆசிரிய சமூகத்தை கடைத்தேற்ற வேறு வழியறியா நிலையில் நம்மை நாமே கண்டித்து நமக்கு நாமே துணையாய் வினையாற்றுவோம் கனத்த இதயத்தோடும்... பனித்த விழிகளோடும்...
மாறாத தோழமையோடும்
மாற்றமில்லா வர்க்க உணர்வோடும்....
விஜி
(ஜாக்டோ, கிருஷ்ணகிரி)
[01/11 9:09 am] Ssta Teachers: ஜாக்டோ போராட்ட அறிவிப்பு ஏமாற்ற மளிக்கிறது.அடுத்த கட்ட போராட்டத்திற்கு ஏன் நீண்ட இடைவெளி?அரையாண்டு விடுமுறையில் போராட்டம் நடத்துவதன் மர்மம் என்ன? பள்ளி வேலைநாளில் போராட்டம் நடத்த ஏன் தயக்கம்?ஆசிரியர்களின் பங்களிப்பை குறைக்க ஜாக்டோ முயல்கின்றதா?அல்லது போராட்ட உணர்வை மழுங்கடிக்க ஜாக்டோவே துணைப்போகிறதா?இடைநிலை ஆசிரியர்களுக்கு ஜாக்டோவின் அறிவிப்பு பெருத்த ஏமாற்றமளிக்கிறது.