, 50 ஆயிரம் பணியிடங்கள் காலி பணித்தேர்வு எப்போது?

தமிழக மின் வாரியத்தில், உதவி பொறியாளர், தொழில்நுட்ப உதவியாளர் உட்பட, 50 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன; இதனால், பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன.
இதையடுத்து, '1,650 காலி பணியிடம் நிரப்பப்படும்' என, செப்டம்பரில்,
சட்டசபையில் தெரிவிக்கப்பட்டது. அதன் படி, உதவி பொறியாளர் - எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் மற்றும் இளநிலை உதவியாளர் போன்ற, 1,650 பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டது.
இதில், 375 உதவி பொறியாளர் தேர்வுக்கான அறிவிப்பு, 2015 டிச., 28ல் வெளியானது. மீதமுள்ள, 1,275 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிக்கவில்லை. இது குறித்து, அதிகாரி ஒருவர் கூறியதாவது:உதவி பொறியாளருக்கான எழுத்து தேர்வு, அண்ணா பல்கலை மூலம் நடத்தப்படும்; மற்ற பதவிகளுக்கான தேர்வு, சென்னை பல்கலை மூலம் நடக்க உள்ளது. சட்டசபை தேர்தல் விரைவில் நடக்க உள்ளதால், தேர்வு அறிவிப்பை வெளியிடுவதில் இழுபறி நீடிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...