சட்டசபை தேர்தலில், 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தும் நிலையில், தபால் ஓட்டுப்பதிவிலும் கவனம் செலுத்த துவங்கியுள்ளது தேர்தல் கமிஷன். அதனால், தேர்தல் பணியில் ஈடுபடும் அனைவரும் கட்டாயம் தபால் ஓட்டு போட வேண்டுமென அறிவுறுத்தியுள்ளது
.ஜனநாயக தேர்தலில், வாக்காளர்கள், 100 சதவீதம் ஓட்டளிப்பதில்லை. கட்சி சார்ந்த ஓட்டுகளே அதிகம்
பதிவாகின்றன. எந்த கட்சியையும் சாராதவர்கள், ஓட்டுச்சாவடிக்கு சென்று வரிசையில் நிற்க விரும்பாமல், ஓட்டளிப்பதில்லை. இதனால், சட்டசபை தேர்தலில், 80 சதவீதத்துக்கும் அதிகமாக ஓட்டுக்கள் பதிவாவதில்லை.
அனைத்து தரப்பு மக்களும், கட்சி சாராதவர்களும் ஓட்டளிக்க வேண்டும். ஓட்டளிப்பது ஒவ்வொருவரின் ஜனநாயக கடமை. ஒவ்வொரு ஓட்டும், ஐந்தாண்டுக்கு ஆட்சி செய்பவர்களை நிர்ணயிக்கும் சக்தி படைத்தவை. அதனால், தேர்தலன்று, ஓட்டுச்சாவடிக்கு தவறாது சென்று, ஓட்டளிக்க வேண்டும் என, தேர்தல் கமிஷன் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.பஸ்கள், வாகனங்கள், ஆட்டோக்கள், பொது இடங்கள், அரசு அலுவலகங்களில், மே 16ல் ஓட்டளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், தேர்தல் பணியில் ஈடுபடும் பணியாளர்களும் கட்டாயம் ஓட்டுப்பதிவு செய்ய வேண்டும் என, தேர்தல் கமிஷன் அறிவுறுத்தியுள்ளது.கோவை மாவட்டத்தில், தேர்தல் பணியில் ஈடுபடுவோருக்கு, தபால் ஓட்டு வழங்குவது குறித்து ஆலோசனை கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் தலைமை வகித்தார்.'வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டு அறிவிப்பு வெளியானதும், பேலட் பேப்பர் அச்சிடும் பணியை துவங்க வேண்டும். அப்போதே, தபால் ஓட்டுக்கான பேலட் பேப்பர் அச்சிடும் பணிகளையும் வேகப்படுத்த வேண்டும். 'தேர்தல் பணியில் ஈடுபடுவோருக்கு, உரிய படிவங்களை வழங்கி, சான்றளிக்க வேண்டும். தபால் ஓட்டு போடும் தேர்தல் பணியாளர்களை அலைக்கழிக்காமல், நடைமுறைகளை எளிமைப்படுத்த வேண்டும்' என, ஆலோசனை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:பொதுமக்கள் ஓட்டு, 100 சதவீதம் பதிவாக வேண்டும் என, விழிப்புணர்வு ஏற்படுத்துவதை போன்று, தபால் ஓட்டுகளும், 100 சதவீதம் பதிவாக வேண்டும். கோவை மாவட்டத்தில், தேர்தல் பணியில் மாநகரம் மற்றும் புறநகரத்தில், 3,600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.ஓட்டுச்சாவடிகள் மற்றும் மண்டல தேர்தல் பணிகளில், 14 ஆயிரத்து, 200 பேர் ஈடுபடுகின்றனர். இதுதவிர, டிரைவர், கிளீனர், வீடியோ கிராபர்கள், கம்ப்யூட்டர் ஆபரேட்டர்கள் என, 1,170 பேரும், தேர்தல் கண்காணிப்பு பணி அலுவலர்கள், 120 பேரும் பணியில் இருப்பர்.மாவட்டம் முழுவதும், 26 ஆயிரம் பேர் தேர்தல் பணிகளில் ஈடு
படுகின்றனர். தபால் ஓட்டு போடுவோரின் வாக்காளர் அடையாள அட்டை நகலை ஒப்படைத்து, தபால் ஓட்டு படிவம், பேலட் பேப்பர் பெற்றுக்கொள்ளலாம். தபால் ஓட்டு செலுத்தி, செல்லாத ஓட்டு பதிவாவதை தவிர்க்க வேண்டும்.இவ்வாறு, தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
'மே 15 மாலை 5:00 மணி வரை'
தேர்தல் அதிகாரிகள் கூறுகையில், 'கடந்த தேர்தலில், தேர்தல் பணியில் ஈடுபடுவோர், அந்தந்த சட்டசபை தொகுதியில் பணியில் இருந்தால், அருகிலுள்ள ஓட்டுச்சாவடியில், 'யுனிகோடு' எண்ணை பயன்படுத்தி ஓட்டுப்பதிவு செய்யும் முறை இருந்தது. 'தற்போது, தேர்தல் பணியில் ஈடுபட்டால், தபால் ஓட்டு மட்டுமே பதிவு செய்ய முடியும். தேர்தல் பணிக்கான உத்தரவுடன், தபால் ஓட்டுக்கான படிவம் 12ஐ பூர்த்தி செய்து, பேலட் பேப்பரில் ஓட்டுப்பதிவு செய்து, மூடி முத்திரையிட்ட கவரில், தபால் ஓட்டு பெட்டியில் செலுத்த வேண்டும்.'மே 15, மாலை 5:00 மணி வரை தபால் ஓட்டு செலுத்தலாம். வழக்கமாக தபால் ஓட்டு பேலட் பேப்பரில் வேட்பாளர் பெயர், கட்சியின் பெயர் மட்டும் இருக்கும். இந்த முறை, தபால் ஓட்டு பேலட் பேப்பரில், வேட்பாளர் பெயர், கட்சி பெயர், சின்னம், வேட்பாளர் போட்டோவும் இருக்கும். படிவத்தை முழுமையாக பூர்த்தி செய்து, பேலட் பேப்பரில் 'டிக்' மார்க் செய்து கவரில் வைக்க வேண்டும்' என்றனர்.