வாட்ஸ்ஆப் மூலம் தேச விரோத சக்திகள் தகவல்களை பகிர்வது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாக மத்திய தகவல் தொடர்பு துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.
பாதுகாப்பு தொடர்பான விஷயத்தில் வாட்ஸ்ஆப்பில் செயல்படும்
வாடிக்கையாளர்கள் பற்றி சர்ச்சை ஏற்பட்டுள்ளது. வாட்ஸ்ஆப்பில் பகிரப்படும் செய்திகளை, சைபர் குற்றவாளிகள், ஹேக்கர்கள், ஏன், நாங்கள் கூட பார்க்க முடியாது என வாட்ஸ்ஆப் செயலியை உருவாக்கியவர்கள் கூறுகின்றனர்.
ஆனால் இந்திய சட்டப்படி இணையதளம் சேவைகளை 40 பிட் என்கிரிப்சன் வரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதற்கு மேல் அவர்கள் பயன்படுத்த வேண்டுமானால் இந்திய அரசின் அனுமதி பெற வேண்டும். மறைமுகமாக, அப்டேட் செய்யப்பட்ட வாட்ஸ்ஆப் செயலியை பயன்படுத்துவது சட்டவிரோதம் என செய்திகள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக மத்திய தகவல் தொழில் நுட்ப துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், நாட்டின் பாதுகாப்பு விஷயங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை. பயங்கரவாதம், நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விஷயத்தில் அரசு முழு கவனத்துடன் இருக்க வேண்டியுள்ளது. மேலும் இது குறித்து தொலை தொடர்பு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். உரிய நேரத்தில் முடிவுகள் எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.