மாணவர்களே.....தயாரா.....பி.இ., பி.டெக் படிக்க அண்ணா பல்கலை.யில் விண்ணப்பங்கள் வரவேற்பு !

சென்னையிலுள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.இ., பி.டெக் படிப்புகள் படிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.
2016-ம் கல்வியாண்டுக்கான படிப்பாகும் இது.
இந்தப் படிப்பில் சேர 12-ம் வகுப்பில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். இயற்பியல், வேதியல், கணிதப் படிப்புகளை அவர்கள் பிளஸ்-2வில்
படித்திருக்கவேண்டும்.
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், முஸ்லிம்கள் ஆகியோர் 45 சதவீத மதிப்பெண் பெற்றால் போதுமானது. எம்பிசி, டிஎன்சி, எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி பிரிவு மாணவர்கள் 40 சதவீத மதிப்பெணக்ள் பெற்றிருந்தாலே போதுமானது.
விண்ணப்பங்களை ஆன்-லைன் மூலம் பெற்றுக்கொள்ளலாம். ஆன்-லைனில் விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து அனுப்பிய பிறகு அதை பிரிண்ட் -அவுட் எடுத்து தகுந்த ஆவணங்களை இணைத்து 'The Secretary, TNEA, Anna University, Chennai- 600025' என்ற முகவரிக்கு அனுப்பவேண்டும்.


ஏப்ரல் 15-ம் தேதி முதலே விண்ணப்பங்களை மாணவர்கள் ஆன்-லைனில் அனுப்பி வருகின்றனர். பிளஸ் 2 தேர்வு வந்த ஒரு வாரம் வரை விண்ணப்பங்களை ஆன்-லைனில் அனுப்பலாம்.
விண்ணப்பங்களை ஆன்-லைனில் அனுப்ப கீழ்கண்ட லிங்க்கை கிளிக் செய்யவும். https://www.annauniv.edu/tnea2016/
மேலும் விவரங்களுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான http://www.annauniv.edu -ல் தொடர்புகொள்ளலாம்.எ

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...