மருத்துவ படிப்புக்கு பொது நுழைவு தேர்வு முறையை, இந்திய மருத்துவ கழகம் எதிர்க்கிறது, என, மாநில தலைவர் தாமோதரன் கூறினார்.
திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் நேற்று இந்திய மருத்துவ கழக கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பங்கேற்ற, இந்திய மருத்துவ கழக
மாநில தலைவர் தாமோதரன் நிருபர்களிடம் கூறியதாவது: மருத்துவ படிப்புக்கு பொது நுழைவுத்தேர்வு நடத்த இருந்த தடையை, சுப்ரீம் கோர்ட் நீக்கி உள்ளது.
இதனால், தமிழகத்தில் கிராமப்புற மாணவர்கள் மற்றும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மாணவர்கள், பெரிதும் பாதிக்கப்படுவார்கள். எனவே, இந்திய மருத்துவ கழகம் பொது நுழைவு தேர்வை எதிர்க்கிறது. இந்திய மருத்துவ கழகம் சார்பில், புதியதாக மருத்துவ கல்லூரி தொடங்க, எங்களது உறுப்பினர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
எனவே, புதிய மருத்தவ கல்லூரி தொடங்க திட்டமிட்டு வருகிறோம். மத்திய அரசு, மருத்துவமனைகளை ஒழுங்குபடுத்தும் சட்டம் நிறைவேற்றியுள்ளது, இதை அமல்படுத்துவதில் சிக்கல் உள்ளது. இதனால், கார்ப்பரேட் மருத்துவமனைகளின் ஆதிக்கம் அதிகமாகுமே தவிர, சிறிய மருத்துவமனைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகும். இவ்வாறு அவர் கூறினார்.