முன்னதாகவே துவங்குகிறதா தென்மேற்கு பருவமழை !

நடப்பு ஆண்டில், தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே துவங்கும் வாய்ப்பு உள்ளது' என, வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இலங்கையின் தென்மேற்கு பகுதியில், காற்று அழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டு, அந்த நாட்டில் கனமழை பெய்து
வருகிறது. இதேபோல, அந்தமான் தீவு அருகேயும், காற்ற அழுத்த தாழ்வு நிலை உருவாகி மழை பெய்கிறது.
'இந்த இரண்டு காற்று அழுத்த தாழ்வுகளும் இணைந்து, நாளை மற்றும் நாளை மறுநாள் தீவிரமடைந்து, தமிழகத்தின் தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும்' என, வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இந்நிலையில், டில்லியை தலைமையிடமாக கொண்ட, 'ஸ்கை மெட்' என்ற தனியார் வானிலை ஆய்வு மையம், நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
அந்தமான் நிக்கோபார் தீவுகள் அருகே, நிலை கொண்டுள்ள காற்று அழுத்த தாழ்வு நிலையை கணிக்கும் போது, அப்பகுதியில், மே 18 - 20 தேதிகளில், தென்மேற்கு பருவமழை துவங்கலாம். இது, கேரளாவை, மே 28 - 30 தேதிகளில் வந்தடையும். இதன்பின், வட மாநிலங்களிலும் மழை துவங்கும்.
ஜூன் 1ல் துவங்கி, செப்டம்பர் வரை, தென்மேற்கு பருவமழை காலம். தற்போதுள்ள நிலவரப்படி, நடப்பு ஆண்டில், முன்கூட்டியே பருவமழை துவங்கும் வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அதில் கூறியுள்ளது.வங்கக் கடலில், இலங்கை அருகே ஏற்பட்டுள்ள காற்று அழுத்த தாழ்வு நிலை குறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை:
நாளை மாலை வலுப்பெறும் காற்று அழுத்த தாழ்வு நிலை, மே 15, 16ம் தேதிகளில் வலுவடையும். தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில், கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
நேற்று காலை, 8:30 மணி நிலவரப்படி, அதிகபட்சமாக, நீலகிரி மாவட்டம் கேட்டி, கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில், 2 செ.மீ., மழை பெய்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில், அதிகபட்சமாக, 39 டிகிரி 'செல்சியஸ்' வெப்பம் பதிவாகி உள்ளது.
சென்னையில், அடுத்த 48 மணி நேரத்திற்கு, வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகபட்சமாக, 36; குறைந்தபட்சமாக, 29 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...