''ஓட்டுச்சாவடிக்குள் மொபைல் போன் பயன்படுத்தினால், பறிமுதல் செய்யப்படும்,'' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.
இதுகுறித்து, அவர் கூறியதாவது:தமிழகம் முழுவதும், 86.44 சதவீதம் வாக்காளர்களுக்கு, 'பூத் சிலிப்' வழங்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள பூத் சிலிப்புகள், கவரில் வைத்து சீலிட்டு, தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம்
ஒப்படைக்கப்பட்டு உள்ளன.பூத் சிலிப் பெறாதவர்கள் பட்டியல், ஓட்டுச்சாவடி அலுவலரிடம் இருக்கும். அவர்கள், தேர்தல் கமிஷன் அறிவித்துள்ள ஆவணங்களை காண்பித்து ஓட்டளிக்கலாம். ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், தயார் நிலையில் உள்ளன. மே 15, 16ம் தேதிகளில், கடலோர மாவட்டங்களில், மழை பெய்யும் என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. எனவே, ஓட்டுப்பதிவு இயந்திரம் மற்றும் பொருட்கள் மழையில் நனையாமல் இருக்க, தேவையான பிளாஸ்டிக் பைகள் வழங்கப்பட்டு
உள்ளன.ஓட்டுச்சாவடி உள்ளே, பூத் ஏஜன்ட்கள், மொபைல் போன் எடுத்து செல்ல அனுமதி கிடையாது; வாக்காளர்கள் எடுத்து செல்லலாம். ஆனால், ஓட்டுச்சாவடி உள்ளே பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. மீறி பயன்படுத்தினால், மொபைல் போன் பறிமுதல் செய்யப்படும்.
சிறை கைதிகள், 1,780 பேருக்கு, தபால் ஓட்டு அனுப்பப்பட்டு உள்ளது. 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள், தாங்கள் வசிக்கும் முகவரிக்கு, ஓட்டை மாற்ற விண்ணப்பித்திருந்தால், மாற்றி கொடுத்திருக்கலாம். தற்போது, எதுவும் செய்ய முடியாது.இவ்வாறு ராஜேஷ் லக்கானி கூறினார்.