"நெட்' தேர்வு: 6 லட்சம் பேர் எழுதினர் !

கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியில் சேருவதற்கான தேசிய அளவில் நடைபெற்ற தகுதித் தேர்வை (நெட்) நாடு முழுவதும் 6 லட்சம் பேர் எழுதினர்.
இந்தத் தேர்வில் எப்போதும் இல்லாத அளவுக்கு நீண்ட கேள்விகள்
கேட்கப்பட்டதால், தேர்வு எழுத நேரம் போதவில்லை என தேர்வர்கள் கருத்து தெரிவித்தனர்.
கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியில் சேருவதற்கான தகுதியைப் பெறுவதற்கும், உயர் கல்வி நிறுவனங்களில் இளநிலை ஆராய்ச்சி உதவித்தொகை பெற தகுதி பெறுவதற்கும் ஆண்டுக்கு இரு முறை ஜூன், டிசம்பர் மாதங்களில் இந்தத் தேர்வு சி.பி.எஸ்.இ. சார்பில் நடத்தப்படுகிறது.
ஜூன் மாதத்துக்கான தேர்வு, ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது.


நாடு முழுவதும் 88 மாவட்டங்களில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையங்களில் இந்தத் தேர்வு நடத்தப்பட்டது.
தமிழகத்தைப் பொருத்தவரை சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய நான்கு மாவட்டங்களில் அமைக்கப்பட்டிருந்த மையங்களில் தேர்வு நடைபெற்றது. நாடு முழுவதிலுமிருந்து 6 லட்சம் பேர் இந்தத் தேர்வை எழுதினர்.
தேர்வர்கள் அனைவரும் தீவிர சோதனைக்குப் பின்னரே தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து சென்னை கொரட்டூரில் அமைந்திருந்த தேர்வு மையத்தில் தேர்வெழுதிய பி.சுந்தர் என்பவர் கூறியது: "நெட்' தேர்வைப் பொருத்தவரை 2 அல்லது 3 வரிகள் கொண்ட கேள்விகள்தான் வழக்கமாகக் கேட்கப்படும். ஆனால், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்வில் தாள்-1 தேர்வுக்கு 4 முதல் 5 வரிகள் கொண்ட கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. இதன் காரணமாக, தாள்-1 தேர்வை எழுத நேரம் போதவில்லை.
எனவே, வரும் காலங்களில் நீண்ட கேள்விகள் கேட்பதை சி.பி.எஸ்.இ. தவிர்க்க வேண்டும் என்றார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...