எல்இடி டி.வி விற்கத் தயாராகும் ரூபாய் 251 போன் நிறுவனம்

ரூபாய் 251-க்கு ஸ்மார்ட்போன் விற்பதாக கூறி பரபரப்பாக பேசப்பட்ட நிறுவனம் ரிங்கிங் பெல். இதனால் பல்வேறு சர்ச்சை எழுந்தது. ரூபாய் 251-க்கு ஸ்மார்ட்போன் விற்பதென்பது சாத்தியமே இல்லை. சாதாரணமாக, ஒரு ஸ்மார்ட்போன் தயாரிக்க ரூபாய்
இரண்டாயிரம் வரை ஆகும் என்று செல்போன் நிறுவனங்கள் நெருக்கடி கொடுத்தன. அதற்குள், இந்த போனுக்கான இணைய ஆர்டர்கள் குவிந்தன. அரசு சார்பிலும் நெருக்கடி கொடுக்கப்பட்டதையடுத்து, இந்த ஸ்மார்ட்போனை விளம்பர சலுகையாகவே அளிப்பதாக இந்நிறுவனம் கூறியது. இணையத்தில் குவிந்த ஆர்டர்களுக்கான பணத்தை கேஷ் ஆன் டெலிவரி மூலமே பெறப் போவதாகவும் தெரிவித்தது. ஆனால், இந்த போன் இன்னமும் டெலிவரி செய்யப்படவில்லை. கடந்த ஜுன் 30ஆம் தேதி டெலிவரி செய்யப்படும் என்று கூறினர். ஆனால், அது ஜூலை 6ஆம் தேதிக்குத் தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில், இந்தத் தேதியை ஜூலை 8ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளனர்.

அந்த நாளன்று 19 மாநிலங்களைச் சேர்ந்த பத்தாயிரம் பேருக்கு முதற்கட்டமாக இந்த போன்கள் விநியோகிக்கப்படும் என்று இந்நிறுவனத்தின் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 7ஆம் தேதி அன்று இந்நிறுவனத்தின் சார்பில் எல்இடி தொலைக்காட்சி வெளியிடப்பட உள்ளது. 32 இன்ச் கொண்ட இந்த தொலைக்காட்சியின் சந்தை விலை ரூபாய் 13,000 ஆகும். ஆனால் ரூபாய் 10,000-க்குத் தரப்போவதாக இவர்கள் கூறுகின்றனர். ‘மொதல்ல ஸ்மார்ட்போனைக் கொடுங்க… அப்புறம் டி.வி கொடுக்கலாம்’ என்கின்றனர் வாடிக்கையாளர்கள்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...