இந்தியாவில் ஸ்மார்ட்போன் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது ஒருபுறமென்றால், ஸ்மார்ட்போன்களுக்கான செயலிகளின் தரவிறக்கமும் அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. உலகில் அதிக அளவிலான மொபைல்
செயலிகள் சீனாவில்தான் தரவிறக்கம் செய்யப்படுகின்றன. இரண்டாவது இடத்தில் அமெரிக்காவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன. அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது. ஆண்டுக்கு 92 சதவிகிதம் இந்த சந்தை வளர்ந்து வருகிறது, குறிப்பாக 770 கோடி மொபைல் செயலிகள் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளன. இது 2020ஆம் ஆண்டு 2010 கோடியாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், சீனாவோ இந்த ஆண்டு 29 சதவிகிதம் மட்டுமே அதிகரித்துள்ளது. ஆனால், அந்நாட்டில் 4900 கோடி பேர் ஏற்கனவே தரவிறக்கம் செய்துள்ளனர். இது இந்தியாவை ஒப்பிடும்போது ஆறு மடங்கு அதிகமாகும். இந்த ஆய்வை app annie apac என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்நிறுவனத்தின் தலைவர் ஜுண்டே யூ பேசியதாவது, “மொபைல் செயலி சந்தையைப் பொருத்தவரை, எத்தனை பேர் டவுன்லோடு செய்தார்கள் என்பதைவிட, அதன் வாயிலாக எவ்வளவு வருவாய் கிடைத்தது, பயனர்கள் எவ்வளவு நேரம் அந்த செயலியில் செலவிடுகிறார்கள் போன்றவையே முக்கியம்” என்றார். பயனர்கள் செலவிடும் நேரமானது 2014ஆம் ஆண்டின் முதல் காலாண்டை ஒப்பிடும்போது, 2016ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. ஃப்ளிப்கார்ட், மிந்த்ரா, அமேசான் மற்றும் ஸ்னாப்டீல் போன்ற இகாமர்ஸ் செயலிகளில் பயனர்கள் செலவிடும் நேரமானது 11.5 மடங்கு கூடியுள்ளது. யூடியூப், ஹாட்ஸ்டார் போன்ற வீடியோ பார்க்கும் செயலிகளில் பயனர்கள் செலவிடும் நேரம் 7.4 மடங்கு அதிகரித்துள்ளது.
“இந்தியாவில் மொபைல் செயலி பயன்படுத்துபவர்களில் பெரும்பாலானோர், பிரவுசர்களிலேயே அதிக அளவிலான நேரத்தைப் பயன்படுத்துவதாக ஒரு எண்ணம் இருக்கிறது. ஆனால், வெறும் 7 சதவிகிதத்தினரே பிரவுசர்களில் நேரத்தை செலவிடுகின்றனர்” என்றார் அவர். இந்தியாவில் மொபைல் செயலி பயன்படுத்துபவர்களில் 25 சதவிகிதத்தினர் உபெர் அல்லது ஓலா போன்ற எதேனும் ஒரு கார் புக்கிங் செயலியைப் பயன்படுத்துகின்றனராம். இது அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிரேசில் போன்ற நாடுகளில் 20 சதவிகிதமாகத் தான் இருக்கிறது. “இந்தியா போன்ற வளரும் நாடுகளில், பயணம் தொடர்பான சேவைகளின் தேவை அதிகரிப்பதையே இது காட்டுகிறது” என்றார் அவர்.