மாணவர்களை சிற்பியாக்கி அழகு பார்க்கும் அரசுப்பள்ளி...!

பசுமையான் தேயிலைத்தோட்டத்தின் மத்தியில், அழகு மிளிரும் இயற்கையான சூழலில் ஒரு பள்ளி அமைந்துள்ளது என்றால், அது வால்பாறை அடுத்துள்ள ஈட்டியார் எஸ்டேட் அரசு துவக்கப்பள்ளி தான்.

இயற்கையை அரணாகக்கொண்டு கடந்த, 1963 ம் ஆண்டு முதல் செயல்படும் இப்பள்ளியில், துவக்கத்தில்
நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வந்தனர். தற்போது, 15 மாணவர்கள் மட்டுமே படிக்கின்றனர்.

மாணவர்களின் எண்ணிக்கை சரிந்தாலும், அவர்களுக்கு அரசு வழங்கும் அனைத்து நலத்திட்டங்களையும் வழங்கி, மாணவர்களை சிற்பியாக்கி அழகு பார்க்கிறது இந்தப்பள்ளி. இதில், எஸ்டேட் தொழிலாளர்களின் குழந்தைகள் தான் அதிக அளவில் படிக்கின்றனர். மாணவர்களின் எண்ணங்களை வடிவமாக்கி, பெற்றோர்களின் கனவை நனவாக்கும் வகையில், அவர்களை சிறந்த மாணவர்களாக இந்தப்பள்ளி உருவாக்கி வருகிறது.

கல்வியால் மட்டுமே ஒரு மாணவன் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்ல முடியும் என்பதை உணர்த்தும் வகையில் மாணவர்களின் தனித்திறமைகளை கண்டறிந்து, அவர்களின் வெற்றிக்கு உறு துணையாக ஆசிரியர்கள் செயல்படுகின்றனர்.

மாணவர்களை, பள்ளி தலைமை ஆசிரியை மாரியம்மாள் மற்றும் உதவி ஆசிரியை ஜெயலின்ரொமேலா ஆகியோர் பள்ளியை முன்னேற்றப்பாதையில், வழிநடத்திச்செல்கின்றனர்.

பள்ளியின் சிறப்புகள்

ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளின், கல்வித்திறன்களை வளர்க்கும் வகையில் அவர்களுக்கு ஏ.பி.எல்., மற்றும் எஸ்.ஏ.பி.எல்.,முறையில் பாடம் சொல்லித்தரப்

படுகிறது. இது தவிர மாணவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் அவர்களுக்கு நாள்தோறும் யோகாபயிற்சி, நன்னெறிக்கல்வி, ஓவியம், விளையாட்டு, செய்திவாசித்தல் போன்றவை கற்றுத்தரப்படுகிறது.

சிறந்த முறையில் கல்வி

பள்ளி தலைமை ஆசிரியை மாரியம்மாள் கூறியதாவது:

எங்கள் பள்ளியை பொறுத்தவரை, இந்தக்கிராமத்தை சேர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகள் தான் அதிக அளவில் படிக்கின்றனர். பெற்றோர்கள் படும் கஷ்டத்தை உணர்ந்து, மாணவர்கள் திறம்பட படிக்கும் வகையில் அவர்களுக்கு சிறந்த முறையில் கல்வி கற்றுத்தரப்படுகிறது. பல ஆண்டுகளாக அரசு நிதியுதவி பெறும் பள்ளியாக இருந்த இந்தப்பள்ளியில், கடந்த, 2013ம் ஆண்டு முதல் அரசு துவக்கப்பள்ளியாக மாற்றப்பட்டது.

இப்பள்ளியில் படிக்கும் மாணவர்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்வது தான் ஆசிரியர்களின் கடமை. அதை உணர்ந்து, சிறந்த முறையில் கல்வி கற்றுத்தரப்படுகிறது. இவ்வாறு, மாரியம்மாள் கூறினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...