காந்திகிராம திறந்தநிலை பள்ளியில் மாணவர் சேர்க்கை...!

காந்திகிராம பல்கலை தேசிய திறந்தநிலை பள்ளி மூலம் 10௦ம் வகுப்பு, பிளஸ்2 மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளது. காந்திகிராம பல்கலையின் வாழ்நாள் கல்வித்துறை சார்பில், தேசிய திறந்தநிலை பள்ளிக் கல்வி திட்டம் செயல்படுகிறது.


இதில் 10ம் வகுப்பு தமிழ்வழிக் கல்வி சேர்க்கை துவங்கியுள்ளது. கடந்த 15 ஆண்டுகளாக 10ம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புகள் நடந்து வருகின்றன. முன்பு பாடநூல்கள் ஆங்கில மொழியிலும், தேர்வுகளை தமிழில் எழுதும் முறை இருந்தது.

தற்போது மாணவர்கள் எளிதில் கற்று தேர்ச்சி அடைய பாடநுால்கள் தமிழில் வெளியிடப்பட்டுள்ளன. 14 வயது பூர்த்தியானவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு இல்லை. பள்ளிக் கல்வியை தொடர வாய்ப்பு இல்லாதவர்கள், வாய்ப்பை இழந்தவர்கள் தங்களது கல்வியை தொடர இது நல்வாய்ப்பு.

இத்திட்டத்தில் சேர ஜூலை 30க்குள் விண்ணப்பம் அனுப்ப வேண்டும். விபரங்களுக்கு 93679 - 12611, 96774 - 82729 எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...