போலி பணி நியமன ஆணை கொடுத்து ரூ.20 லட்சம் மோசடி செய்த ஆசிரியர் கைது !

திருவண்ணாமலை அருகே, அரசு வேலை வாங்கி தருவதாக, போலி ஆணை தயாரித்து கொடுத்து, 20 லட்சம் ரூபாய் மோசடி செய்த, அரசு பள்ளி ஆசிரியரை, குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே, கூடலுார் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபால், 35; நடுக்குப்பம் ஊராட்சி ஒன்றிய
தொடக்கப் பள்ளியில், ஆசிரியராக உள்ளார். இவர், ஆரணி அகிலாண்டபுரம், சதுப்பேரி, வேலுார் மாவட்டம், ஆற்காடு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த, 25 பேரிடம், பள்ளி அலுவலக இளநிலை உதவியாளர், புத்தக கண்காணிப்பாளர் மற்றும் ஆய்வக உதவியாளர் வேலை வாங்கி தருவதாக கூறி, 20 லட்சம் ரூபாய் வசூல் செய்தார். பணம் பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணையும் வழங்கினார். தங்களுக்கு வழங்கப்பட்ட பணி நியமன ஆணை குறித்து சந்தேகம் ஏற்பட்டதால், பாதிக்கப்பட்டோர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் விசாரணை நடத்தியதில், போலியான அரசு முத்திரை, அரசு அலுவலர்களின் கையொப்பமிட்டு, போலி ஆணை தயாரித்தது தெரியவந்தது. இதையடுத்து, ஜெயபாலை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...