உளுந்துார்பேட்டை அருகே லஞ்சப் புகாரில் சிக்கிய வி.ஏ.ஓ., பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். விழுப்புரம் மாவட்டம், உளுந்துார்பேட்டை தாலுகா எம்.குன்னத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் கொளஞ்சி(45). இவர் ஓராண்டுக்கு முன் இறந்தார்.
இவரது ஈமச் சடங்கு செலவிற்காக, வருவாய் துறை மூலம் வழங்கப்படும் 12 ஆயிரத்து 500 ரூபாயை, வழங்க அப்பகுதி வி.ஏ.ஓ., லஞ்சமாக ரூ. 4 ஆயிரம் கேட்டதாக கூறி, லஞ்சம் கொடுக்க பணம் திரட்டும் வகையில், கொளஞ்சியின் மகன் அஜித்குமார்(16),
குன்னத்துாருக்கு வந்த பஸ் பயணிகளிடமும், பொது மக்களிடமும் பிச்சை கேட்டு நேற்று முன்தினம் போராட்டம் நடத்தினார். பின்னர் வி.ஏ.ஓ., அலுவலகம் முன்பு, தரையில் அமர்ந்து பிச்சை எடுத்தார். இச்சம்பவத்தை தொடர்ந்து வருவாய்துறையினர், வி.ஏ.ஓ., சுப்ரமணியன் மற்றும் அஜித்குமாரிடம் விசாரணை நடத்தினர். திருக்கோவிலுார் ஆர்.டி.ஓ., செந்தாமரை, தாசில்தார் ராஜேந்திரன் உத்தரவின்படி, வி.ஏ.ஓ., சுப்ரமணியன் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். களமருதுார் வி.ஏ.ஓ., நாகராஜன், எம்.குன்னத்துார் வி.ஏ.ஓ., பணியை கூடுதலாக கவனிக்குமாறு, தாசில்தார் ராஜேந்திரன் உத்தரவிட்டு உள்ளார்.