இன்றுடன் முடியும் ஒலிம்பிக் திருவிழா: இந்தியாவுக்கு எட்டாக்கனியான தங்க பதக்கம் !

ரியோடி ஜெனீரோ நகரில் நடந்து வரும் ஒலிம்பிக் போட்டிகள் இன்றுடன் நிறைவடைகிறது.
பிரேசிலில் உள்ள ரியோடி ஜெனீரோ நகரில் 31வது ஒலிம்பிக் போட்டிகள் கடந்த 5ம் தேதி பிரமாண்டமாக துவங்கின. இந்த போட்டிகளில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 11 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் கலந்து
கொண்டுள்ளனர்.
இந்தியா சார்பில் 120 வீரர், வீராங்கனைகள் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளனர். அமெரிக்கா 43 தங்கம் உள்பட 116 பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

27 தங்கம் உள்பட 66 பதக்கங்களுடன் இங்கிலாந்து இரண்டாவது இடத்திலும், 26 தங்கம் உள்பட 70 பதக்கங்களுடன் சீனா மூன்றாவது இடத்திலும், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலப் பத்தக்கத்துடன் இந்தியா 66வது இடத்திலும் உள்ளன.
இந்நிலையில் ஒலிம்பிக் போட்டிகள் இன்றுடன் நிறைவடைகின்றன. இன்று மாலை 5 மணிக்கு நடந்த மல்யுத்த போட்டியின் தகுதிச் சுற்றில் இந்தியாவின் யோகேஷ்வர் தத் மங்கோலிய வீரர் கன்சோரிஜின் மந்தக்நரனை எதிர்கொண்டார். மங்கோலிய வீரர் 3 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இதையடுத்து இந்தியாவின் தங்க கனவு தகர்ந்துள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...