மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து சென்னையில் பாஜக தலைமை அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற காங்கிரஸார் கைது செய்யப்பட்டனர். மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்றது முதலே இந்துத்துவா கொள்கைகளைத் திணிக்க முயற்சிப்பது என்பது புகார்.
இதன் ஒருகட்டமாக, நாடு முழுவதும் புதிய கல்விக் கொள்கை, பொது சிவில் சட்டம் உள்ளிட்டவற்றை அமல்படுத்த முயற்சிப்பதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இதற்கு எதிராக பல்வேறு அமைப்புகள்,கட்சிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றன. மத்திய அரசின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து சென்னையில் பாஜக தலைமை அலுவலகத்தை இன்று காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை பிரிவினர் முற்றுகையிட முயன்றனர். ஆனால், அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதனால், பாஜக தலைமை அலுவலகம் அருகே சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது.