சப்தமும் அடங்கிய சட்டம்!

இதில், குடும்பம் மற்றும் ஒட்டுமொத்த சமுதாயம் இரண்டிற்குமான பயன் சமநிலை அடையும் போதுதான் கல்வி முழுமை பெறும். அனைத்து துறையினருக்கும் இக்கருத்து பொருந்துகின்ற போதிலும், சட்டம்
படித்தவர்களுக்கு சாலப்பொருந்தும். பொதுவாக, சட்டம் என்பது குறிப்பிட்ட துறை சார்ந்தவர் மட்டுமின்றி, அனைவரும் அறிந்துகொள்ள வேண்டியது.
சட்ட அறிவு நமக்கு தேவையில்லை என்று எவராலும் ஒதுக்கி வைத்துவிட முடியாது. கணிதம், வரலாறு, சமூகவியல் பாடங்களைப் போன்று, ஒன்பதாம் வகுப்பிலிருந்தே சட்டமும் ஒரு பாடமாக இணைக்கப்பட வேண்டும். பிற பாடங்களின் இடையே இலை மறைவாக இல்லை; நேர்முகமாகவே சட்டம் ஒரு பாடமாக பள்ளிகளில் சேர்க்கப்படவேண்டும். சட்டம் இல்லை என்றால் சப்தமும் ஒடுங்கி விடும்!



யார் வழக்கறிஞர்?



சட்டத்தை அனைவரும் அறிந்துகொள்ள முடியும் என்றபோதிலும், சட்டக் கல்வியை ஒரு பட்டப்படிப்பாக முழுநேரமாக படித்தவர்கள் மட்டுமே பார் கவுன்சில் ஆப் இந்தியாவில் பதிவு செய்து ஒரு வழக்கறிஞராக தொழில் செய்ய முடியும். பகுதிநேர படிப்போ, தொலைநிலைக் கல்வியோ வழக்கறிஞராக பணியாற்ற உதவாது. எனினும், தொலைநிலைக் கல்வி வாயிலான படிப்பு சட்டத்தை அனைவரும் அறிந்துகொள்ள பேருதவி புரிகிறது.



சட்டக் கல்விக்கும் செயல்முறைப் பயிற்சி மிக அவசியம். ‘மூட் கோர்ட்’ பங்காற்றல், முக்கிய விவாதங்கள், பதிவாளர் அலுவலங்கள் மற்றும் காவல் நிலைய செயல்பாடுகள் ஆகியவற்றை நேரடியாக பார்த்து ஆராய்ந்து அறிவது வழக்கறிஞராக ஆகும் கனவுடன் சட்டம் படிக்கும் மாணவர்களுக்கு அவசியம். இன்றைய நிலையில், ஒரு சட்டப் பட்டப்படிப்பில் 30 சதவீதம் மட்டுமே ‘தியரி’ ஆகவும், 70 சதவீதம் செயல்முறைப் பயிற்சி ஆகவும் இருக்க வேண்டும்.



திருநங்கைங்களும் வழக்கறிஞராக மட்டுமின்றி நீதிபதியாகவும் உயரவேண்டும். கட்சிக்காரர்களுக்கு நேர்மையாக நடந்துகொள்ளுதல். மனசாட்சிக்கு உட்பட்டு நியாயமான கட்டணம் வசூலித்தல், சட்ட ஆலோசனைகளுக்கு கட்டணம் பெறாமை, நேரம் தவறாமை, கையில் எடுக்கும் வழக்கு சார்ந்த தெள்ளத் தெளிவான பார்வை மற்றும் ஆழ்ந்த சட்ட அறிவு, அனைத்திற்கும் மேலாக ஒழுக்கம், இந்த அனைத்து பண்புகளும் ஒவ்வொரு வழக்கறிஞருக்கும் இருக்க வேண்டும். இவற்றை உறுதிப்படுத்தும் நோக்கில், இந்தாண்டு முதல் நாங்கள் சட்டக்கல்வியை வழங்க உள்ளோம்!



-முனைவர் எஸ். கஜேந்திர ராஜ், டீன்-சட்டம், பாரத் பல்கலைக்கழகம், சென்னை.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...