பெங்களூருவில் ரூ.25,000 கோடி நாசம்!

கர்நாடகாவில் நடந்துவரும் காவிரி நதிநீர்ப் பிரச்னையால், பெங்களூருவில் சுமார் ரூ.22,000 கோடி முதல் ரூ.25,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக அசோசம் அமைப்பு தனது ஆய்வில் தெரிவித்துள்ளது.

கர்நாடகாவில் கடந்த சில நாட்களாகவே வன்முறை அதிகரித்து பேருந்துகள், கடைகள், கட்டடங்கள் உள்ளிட்டவை எரிக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் சிலிகான் பள்ளத்தாக்கு
என்றழைக்கப்படும் பெங்களூருவில் பல்வேறு ஐ.டி. நிறுவனங்களும், இதர ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் இயங்கிவருகின்றன. வன்முறை காரணமாக இன்ஃபோசிஸ், விப்ரோ, அக்கென்சர் உள்ளிட்ட கம்பெனிகளுக்கு விடுமுறை விடப்பட்டு, அதன் ஊழியர்கள் வீட்டிலிருந்தபடி பணிபுரிய அறிவுறுத்தப்பட்டனர். இருப்பினும் அவற்றின் வர்த்தகத்தில் சரிவு ஏற்பட்டுள்ளதோடு, சில பகுதிகளில் கம்பெனிகளும் தாக்கப்பட்டுள்ளன. ஃபார்சூன் 500 பட்டியலில் இடம்பெற்ற இந்தியாவின் முன்னணி நிறுவனங்கள் அங்குள்ளதால், அவை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதுபோல போக்குவரத்து, தொழிற்சலை உற்பத்தி, மால்கள், சினிமா திரையரங்கங்கள், ஹோட்டல்கள் ஆகியவை அனைத்தும் அதிக நஷ்டத்தை சந்தித்துள்ளன. இந்த இழப்புகளால் பெங்களூருவில் ரூ.25,000 கோடி வரையில் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் பொருட்சேதம் ஏற்பட்டுள்ளதோடு, முதலீடு செய்ய ஏற்ற நகரம் என்ற தனது நற்பெயரையும் பெங்களூரு இழந்துவருகிறது என இந்த ஆய்வில் தெரிவித்துள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...