டோல்கேட்டில் பணம் செலுத்த வேண்டாம

”- வங்கிகள் தரும் வாய்ப்பு!

டோல்கேட்களில் வரிசையில் காத்திருந்து பணம் செலுத்தும் சிரமத்தைப் போக்கும் வகையில், பாஸ் மூலமாக விரைவில் கடந்துசெல்லும் வசதியை தற்போது, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் வங்கி, ஐ.டி.எஃப்.சி. வங்கி மற்றும் பே.டி.எம். ஆகியவை தங்களது வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளன.


பொதுவாக, தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள டோல்கேட்களில் கடந்துசெல்லும் வாகனங்களுக்கு அவற்றின் அளவுவாரியாக, வெவ்வேறு கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. சில நேரங்களில், அதிகமான வாகனங்கள் செல்லும்போது, நீண்ட வரிசையில் காத்திருந்து செல்வது கடினமாக இருப்பதோடு, ஏதேனும் அவசர காரியங்களுக்குச் செல்வதும் இதனால் தாமதமாகிறது. சிலர் இதனால் டோல்கேட் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவதும் உண்டு. இதுபோன்ற இன்னல்களைக் குறைக்கும்வகையில், வாகனங்களில் கடவுச்சீட்டு மூலமாக பணம் செலுத்தாமல் கடந்து செல்லும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த வாகனம் கடக்கும்போதே முன்பகுதியில் ஒட்டப்பட்டுள்ள கடவுச்சீட்டு ஸ்கேன் செய்யப்பட்டு அவருடைய வங்கிக் கணக்கிலிருந்து டோல்கேட் கட்டணம் பின்னர் பிடிக்கப்படுகிறது. இத்திட்டத்தை ஏற்கனவே ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி அறிமுகப்படுத்தியது. இவ்வங்கி இதுவரையில், சுமார் 60,000 பேருக்கு இந்த கடவுச்சீட்டு வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...