டி.என்.பி.எஸ்.சி. குரூப்–4 காலிப்பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு வருகிற நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. இந்த எழுத்து தேர்வுக்கு ஏராளமானோர் விண்ணப்பித்து வருகின்றனர்.
விண்ணப்பித்து தேர்வு எழுதுவதற்கு படித்து கொண்டிருக்கும் கல்லூரி மாணவிகளுக்கு இலவச பயிற்சியை வருமான வரித்துறை அதிகாரி பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி வழங்கி வருகிறார்.சென்னை காயிதே மில்லத் அரசினர் மகளிர் கலைக்கல்லூரி மாணவிகள் சுமார் 100–க்கும் மேற்பட்டோருக்கு நேற்று இலவச பயிற்சி வழங்கப்பட்டது. சிறப்பு விருந்தினராக மத்திய அரசாங்க கடன் மீட்பு தீர்ப்பாய செயலாளர் சாலைமாறன் கலந்துகொண்டு, மாணவிகளுக்கு குரூப்–4 பணிகள் குறித்தும், அந்த தேர்வுக்கு எப்படி தயாராக வேண்டும்? தேர்வில் கேட்கப்படும் பாடத்திட்டங்கள் எவை? என்பது குறித்து ஆலோசனை வழங்கினார். கல்லூரி முதல்வர் ராதாவும் ஆலோசனை வழங்கினார்.இதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரி பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், ‘‘இக்கல்லூரியில் ஒரு சிலராவது போட்டித்தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்று முனைப்போடு இந்த இலவச பயிற்சி வகுப்பை நடத்துகிறோம். நவம்பர் 5–ந்தேதி வரை இந்த பயிற்சி வகுப்பு தினமும் பிற்பகலில் நடக்கும். இதன் வெற்றியை பொறுத்து, அடுத்தக்கட்டமாக ஒவ்வொரு கல்லூரிகளிலும் அடுத்து வரும் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி நடத்த இருக்கிறோம். ஏனெனில் அரசு பணிகளில் திறமையான பெண்கள் வர வேண்டும் என்ற நோக்கில் இந்த பயிற்சி நடக்கிறது’’, என்றார்.