குரூப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு!!!

குரூப் 4 தேர்வுக்கு இலவச பயிற்சி அளிப்பது குறித்து சென்னை சாய் அகடாமியின் கிருஷ்ணகிரி மைய பொறுப்பாளர் சாருமதி வெளியிட்டுள்ள அறிக்கை:


கிருஷ்ணகிரி அறிஞர் அண்ணா கல்லூரியில், குரூப், 4 தேர்வுக்கான, ஒரு மாத இலவச பயிற்சி வகுப்பு, சென்னை சாய் ஐ.ஏ.எஸ்., அகாடமியால் நடத்தப்படுகிறது. இதற்கான வகுப்பு வரும், 6ம் தேதி துவங்குகிறது. சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில், காலை, 10:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை பயிற்சி வகுப்பு நடைபெறும்.

அவசியம் ஏற்பட்டால் வார நாட்களிலும் வகுப்புகள் நடத்தப்படும். மாதிரி தேர்வுகள் ஒவ்வொரு வாரமும் நடத்தப்படும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ளவர்கள் அதிக அளவில் அரசுப்பணிக்கு செல்ல வேண்டும் என்ற நோக்கில் இந்த இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. இவ்வாறு தெரிவித்துள்ளார்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...