நாடு முழுவதும் இதுவரை சுமார் 106 கோடி பேருக்கு ஆதார் எண் வழங்கப்பட்டுள்ளதாக ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அந்த ஆணையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நாடு முழுவதும் தற்போது வரை 106.69 கோடி பேருக்கு ஆதார் எண் வழங்கப்பட்டுள்ளது. புள்ளிவிவரத் தகவல்களின்படி, மகாராஷ்டிரம், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஆந்திரம், சத்தீஸ்கர், பஞ்சாப் உள்ளிட்ட 22 மாநிலங்களிலும் யூனியன்
பிரதேசங்களிலும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் ஆதார் எண் வழங்கப்பட்டுள்ளது. இந்த மாநிலங்களிலும் யூனியன் பிரதேசங்களிலும் 18 வயதுக்கு மேற்பட்ட ஒருவர் கூட விடுபடவில்லை என்பதை உறுதி செய்வதற்காக, அக்.15ஆம் தேதி தொடங்கி ஒரு மாதத்துக்கு சிறப்பு ஆதார் முகாம்கள் நடத்தப்பட உள்ளன.
ஆதார் எண் பெறத் தவறியோர், இந்த சிறப்பு முகாம்களை பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்காக ட்ற்ற்ல்ள்://ஜ்ஜ்ஜ்.ஜ்ங்ய்ழ்ர்ப்.ன்ண்க்ஹண்.ஞ்ர்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். பின்னர், குறுந்தகவல் மூலம் இதர விவரங்கள் தெரிவிக்கப்படும் என்று அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது