இந்தியா முழுவதும் பொதுப்பாடம் என்பது பள்ளி கல்வி அளவில் பெரும் சிக்கலையே ஏற்படுத்தும் என்பதே உண்மை. இதனை பாடவாரியாகவே சற்று விரிவாக காணலாம்.
மொழிப்பாடம்:
1. தாய்மொழி: சிக்கல் இல்லை மாநில மொழியின் சிறப்புகள்,மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடும்
2.இந்தி: அஅங்கீகரிக்கப்படாத தேசிய மொழி. தமிழகம் போன்ற மாநிலங்கள் இந்தி வேண்டாம் என்ற நல்ல முடிவினை எடுத்து நம்மைக் காப்பாற்றி விட்டனர்.
3. ஆங்கிலம்: உலகினை தொடர்பு கொள்ள உள்ள மொழி.
இதனை பொதுமைப்படுத்தி அப்படியே ஏற்றுக்கொண்டது அபத்தமானது என்பதனை உணரலாம்.
உதாரணமாக :
ஒருவரை வரவேற்க warm welcome என்கிறோம். வெப்பமண்டல நாடான நமது நாட்டில் சூடாக வரவேற்க இயலாது. அதைப்போன்றே Rain rain go away மழையின்றி வறட்சி கோரத்தாண்டவம் ஆடும் போது நம் வீட்டு மழலை மழை வேண்டாம் என்று பாடி வருகிறது.
இருப்பினும் ஒப்பீட்டளவில் மொழி பரவாயில்லை.
கணிதம்:
அடிப்படையில் துவங்கி எண்ணியல், இயற்கணிதம்,முக்கோணவியல்,வடிவியல், வகைநுண் கணிதம் என்ற கணிதத் தின் செயல்பாடுகளைக் கற்றோம் இவற்றை எந்த சூழலில் பயன்படுத்த வேண்டும் என்பதனை எந்த ஆசிரியரும் கற்றுத்தரவில்லை. நாம் வேண்டுமானால் மாணவர்களுக்குக் கூறிடலாம்.
உதாரணத்திற்கு வயல்வெளிப் பகுதியில் வாழும் மாணவன் அளவைகள் மடங்குகள்,துணை மடங்குகளை பற்றி அறிதல் வேண்டும்.
இப்போதிருக்கும் பாடத்திட்டமே நம்மிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த முடியவில்லையே..
அறிவியல்:
மண் சார்ந்த அறிவு அனைவருக்கும் அவசியமான தேவையாகும்.
1. மலைப்பகுதியில் வசிக்கும் மாணவனும், மலையே பார்க்காத சமவெளி மாணவனும் ஒரே பாடம் படிப்பது தவறு.
2.பெருநகரத்தில் வசித்த தந்தை தனது மகனுக்கு ஆட்டிக்குட்டி என்பதை விளக்க கிராமத்தினை நோக்கி வந்த கதையினை 3 ஆண்டுகளுக்கு முன்னரே கேள்விபம்பட்டோம். 100 அடி சாலை,சிக்னல் இவற்றை ஒற்றையடிப் பாதையில், வருடத்திற்கு சில முறை மட்டுமே பேருந்தை பார்க்கும் மாணவன் எப்படி புரிந்து கொள்ள இயலும்.
3. காவிரி நீருக்காக கன்னத்தில் கை வைத்து ஏங்கித்தவிக்கும் ஏழை விவசாயின் மகன் வற்றாத ஜீவநதி கங்கையினை வானளாவ புகழ்வது முரணானது இல்லையா?
4.முத்துப்பேட்டை, சிதம்பரம் அலையாத்திக் காடுகள் குறித்து அறிந்து கொள்ளாமல் வங்காளத்து மாங்குரோவ் காடுகளின் பயனை பட்டியலிடுவது தகுமா?
5.பல்லுயிரிகளின் உச்சம் மேற்குத்தொடர்ச்சி மலைகள் குறித்து ஆனைமலை குறித்து அறியாமல் இமயமலையின் கிழக்குப் பகுதிகளின் சிறப்பை அறிதல் என்ன பயனைத் தரும்?
6. ஜாம்ஜெட்பூரின் இரும்பு எஃகு ஆலைகள் தெரியும், சேலத்திலுள்ள இரும்பு ஆலைகளை மறந்தோம்.
7. தென்னை,கொய்யா போன்ற அயலகத் தாவரங்களை நம் ஊரில் சிறப்பாக வளர்த்தோம், பனை,ஈச்சமரம் பெருமையினை அறியாது அவற்றினை அழித்தோம்.
சமூக அறிவியலில் எத்தனை நாட்கள் வட இந்திய அரசுகளை படிப்படிப்பது.
புவியியல் பகுதியில் கடற்கோள்கள் இல்லாத்தனால் கடற்பகுதுயில் வசித்தோர் சுனாமியால் மாண்டனர்.
தமிழகம் போன்ற ஓரளவு சிறப்பான மாநிலம் பொதுப்பாடத்திட்டம் என்பதனை முற்றிலும் எதிர்க்க வேண்டும்.
பொதுப்பாடத்திட்டம் என்பது அனைவரையும் ஒரே குடைக்குள் கொண்டுவருவது என்று நீங்கள் நம்பினால் அது தவறு. இந்தியாவின் சிறப்பே அதன் பன்முகத் தன்மையில் தான் அடங்கியுள்ளது.
கலாச்சாரம், மொழிகள், உடைகள், உருவம்,நிலவியல்,காலநிலை - இவற்றினால் வேறுபாடு அடைந்துள்ள நாட்டில் ஒற்றை கலாச்சாரம், பாடத்திட்டம் என்பது தவறாகாதா?
உதாரணத்திற்கு, இந்துக்கள் பெரும்பாண்மையினர் என்பதற்காக பாடநூலில் சரஸ்வதி பாடம் வருகின்றது என்றால் அதனை மற்ற மதத்தினர் ஏற்றுக்கொள்ள முடியாது என்றால் அது தேச விரோதமா?
பொதுப்பாடத்திட்டம் என்றே வைத்து காடுகளின்,ஆறுகளின்,மண்ணின்,
உயிரினங்களின் பெருமைகளை மறத்திட அனைவரும் முயற்சி செய்யும் சூழ்ச்சி புரியவில்லையா?
1 லோடு ஈரமணலில் 1000 லிட்டர் தண்ணீர் உள்ளது. 1 மரம் அழிந்தால் அதனோடு தொடர்புடைய 4 உயிரினங்கள் அழிந்து விடும். மண்ணின் ஆழத்தில்1 மீ உள்ளே எது கிடைத்தாலும் எவர் இடமாக இருப்பினும் அரசுக்குச் சொந்தம்.
பொதுப்பாடத்திட்டம் வசதியாக இந்த உண்மையினை மறைத்து விடுகிறது. மணற்கொள்ளையினை வேடிக்கைப் பார்த்தோம்- நீரின்றி தவிக்கின்றோம்.
மரங்களை வெட்டி வெட்டி 11% மட்டுமே காடுகள் உள்ளன. இது சர்வதேச 33% எவ்வளவு குறைவு. மண்ணின் பெருமை தெரியாமல் கிடைக்கும் பொருட்களை அம்பானி, கிராணைட், அதானி,டாட்டா குழுமத்திற்கு விட்டு விட்டோம்.
நமக்கு என்ன பாடம் தேவை என்பதனை ஆசிரியர்கள் நாமே பாடத்தினை உருவாக்குவோம்.ஏன் நீங்களே இக்குழுவில் இடம்பெறலாம்.வாய்ப்பு உங்களுக்கு இல்லை என்றாலும் தெரிந்தவருக்காவது கிடைக்கும்!. ஆனால் பொதுப் பாடத்திட்டம் என்றால் பலநூறு கி.மீ அப்பால் வடிவமைக்கம்படும்..
பொதுப்பாடத்திட்டம் என்பது அபத்தம். அது கூலியாட்களை வேண்டுமானால் உருவாக்கும் ஒரு போதும் முதலாளிகளை அல்ல!
கடலின் வெப்பநிலை 2 டிகிரி உயர்வடைந்தாலே அங்குள்ள உயிரினம் அழியும் அபாயம் உள்ளது. இது குறித்த பாடம் பொதுவாக வைத்தால் எத்தனை இடிந்தகரை போராட்டாங்கள் நடக்கும்.
போபால் விஷவாயு உயிரழிப்பு எதிர்திசையில் ஓடினாலோ, ஈரமான கைக்குட்டையினை கொண்டு முகத்தினை மூடினாலோ தவிர்த்து இருக்கலாமே பொதுப்பாடத்திட்டத்தில் இவற்றிற்கு இடமே இல்லையே..
மருத்துவம்,பொறியியல் துறைகள் கண்டிப்பாக தாய்மொழியில் இருந்தால் சிறப்பாக இருக்குமே.. இவற்றைப் பொதுப்பாடத்திட்டமாக வைத்து எத்தனை ஆங்கில வழி மருந்துகள் உட்சென்று உடலை கெடுக்கின்றன. பொறியியல் பொதுப்பாடத்திட்டம் ஒரு கரிகாற்சோழனையும் உருவாக்க முன் வர வில்லையே..
இந்துத்துவா ஆட்சியாளர்கள் கூறும் பஞ்சாங்க கதை எல்லாம் அறிவியலில் இடம்பெற்று நம்மை அறிவிலிகா மாற்ற வேண்டுமா?
ஓசை மாசுபாட்டினால் பலருக்கு மனநோயும், முறையற்ற உணவுப் பொருட்களினால் அதிகமாக புற்று நோய்களும், காற்றில் மிதமிஞ்சிய தூசுக்கள்,சல்பர்-டை- ஆக்ஸைடுகளினால் நுரையீரல் தொடர்பான பல்வேறு நோய்களும், நாளிற்கு நாள் நோய்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது இரக்கமின்றி எப்படி நம் அரசுகளால் புதிதாக மருத்துவக் கல்லூரிகள் தொடங்க இயலாது என்று கூறிட இயலும்.
கல்வியானது தற்போது பொதுப் பட்டியலில் உள்ளது. இதுவே தவறு. நெருக்கடி நிலை நிலவிய காலத்தில் (1976 ) அரசியல் அமைப்பு ச்சட்டத்திருத்தம் 42 இன் படி கல்வியானது மாநிலப்பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு மாறியது. 40 ஆண்டுகளுக்குப்பின்னர் இதனை அப்படியே மத்தியப்பட்டியலுக்கு எடுத்துக் கொள்ள மத்திய அரசு செய்கின்றது. இது மாநில உரிமைகள் மட்டுமின்றி நமது உரிமைகளையும் சேர்த்தே பறிப்பதாகும்..
பொதுப்பாடத்திட்டம் என்பதனை கைவிட்டு அந்தெந்த மாநில வாரியங்களினால் பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டியதே அவசியமாகும் .செ.மணிமாறன் திருவாரூர்.