தமிழகம் முழுவதும் 17,495 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை: வீடியோ மூலம் கண்காணிக்க உத்தரவு !

தமிழகம் முழுவதும் உள்ள பதற்றமான 17,495 வாக்குச்சாவடி களை வீடியோ மூலம் கண் காணிக்க மாவட்ட தேர்தல் அலு வலர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக மாநில தேர் தல் ஆணையம் நேற்று வெளி யிட்ட செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது:
 தமிழகத்தில் உள்ளாட்சித் தேர் தல்கள் வரும் 17, 19 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடக்க வுள்ளது.
இத்தேர்தலில் நகர்ப் புறத்தில் 28,761 வாக்குச்சாவடி களும், ஊரகப் பகுதியில் 62,337 வாக்குச்சாவடிகளும், சென்னை மாவட்டம் உட்பட மொத்தம் 91,908 வாக்குச்சாவடிகள் அமைக் கப்பட்டுள்ளன.

இவற்றில் 17,495 வாக்குச்சாவ டிகள் பதற்றம் நிறைந்தவைகளாக மாவட்ட தேர்தல் அலுவலர்களால் கண்டறியப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் வாக் காளர்கள் அச்சமின்றி வாக்க ளிக்கவும், அசம்பாவிதங் களையும் முறைகேடுகளையும் கண்காணிக்கவும் வாக்குப்பதிவு முழுவதையும் வீடியோவில் பதிவு செய்யும்படி மாவட்ட தேர்தல் அலுவலர்கள், மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது. இதற்காக மாநில தேர்தல் ஆணையம் ரூ.3 கோடியே 37 லட்சத்து 41 ஆயிரத்தை ஒதுக்கியுள்ளது.

கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய் மார்கள் மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பணியாளர்களுக்கு மாநில தேர்தல் பணியில் இருந்து விலக்கு அளித்து உத்தரவிடப் பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...