, 6 லட்சம் வாடிக்கையாளர்களின் கார்டுகளை தற்காலிகமாக முடக்கம் !

இங்கு நாம் சீன பட்டாசுகளை தவிர்ப்போம் னு முகநூலில் முனகி கொண்டிருக்கும் வேளையில் SBI , ICICI , YES Bank and AXIS வங்கிகளின் 32 லட்சம் வாடிக்கையாளர்களின் டெபிட் கார்ட் (கிரெடிட் கார்ட் அல்ல ) தகவல்களை சீனா திருடி அங்கு உபயோகிக்க தொடங்கியிருக்கிறது.டெபிட் கார்ட் என்பதால் நம் சேமிப்பு கணக்கில் இருந்தே இந்த பணம்
திருடப்படுகின்றது. இதுவரை நம் வங்கிகளின் சரித்திரத்தில் இல்லாத ஒரு மிக மோசமான சைபர் தாக்குதல் என்று Payment Council of India இதை கண்டித்துள்ளது .

இந்த தகவல்கள் அனைத்தும் ஏடிஎம் இயந்திரங்கள் மற்றும் POS கருவிகள் (ஷாப்பிங் மால்களில் கார்டு தேய்க்கும் சிறிய கருவி) தயாரிக்கும் Hitachi Payment Services நிறுவனத்தின் தகவல்களில் இருந்தே திருடப்பட்டுள்ளது. இதுவரை இந்த நிறுவனம் 48000 ஏடிஎம் இயந்திரங்கள் 2,30,000 Swipe கருவிகள் என இந்தியாவில் விற்று சாதனை படைத்துள்ளது. இதன் அலுவலகம் மற்றும் Central Operations Centre சென்னை என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று,  இதுவரை திருடப்பட்ட பணம் அனைத்தும் சீனா  வில் இருந்து பணம் எடுக்கப்பட்டதாகவே வாடிக்கையாளர்களுக்கு தகவல்கள் வந்துள்ளது.

தாக்குதலை தொடர்ந்து அனைத்து வங்கிகளும் அந்தந்த வங்கிகளின் ஏடிஎம் நிலையங்களுக்கு சென்று டெபிட் கார்டுகளின் பின் நம்பர்களை (கடவு எண்) மாற்ற பரிந்துரை செய்துள்ளன.SBI வங்கி, 6 லட்சம் வாடிக்கையாளர்களின் கார்டுகளை தற்காலிகமாக முடக்கியிருக்கிறது , இவர்கள் அனைவருக்கும் மிக விரைவில் புது கார்டுகள் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது ..
நண்பர்களே நீங்களும் உங்கள் டெபிட் கார்டின் கடவு எண்ணை மாற்றிக்கொள்ளுங்கள் ..இப்போது மட்டுமல்ல , குறிப்பிட்ட காலத்திற்கொருமுறை கடவு எண்ணை மாற்றுவதே இதிலிருந்து தப்பிக்க ஒரே வழி.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...