நாடு முழுவதும் அக்டோபர் 29ஆம் தேதி தீபாவளி பண்டிகையைக் கொண்டாட உள்ளனர். இதனால், அனைத்து நகரங்களிலும் பட்டாசு விற்பனைத் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் செயல்படும் தபால் நிலையங்களில் பட்டாசுகளுக்கான
கூப்பன் விற்பனை தொடங்கி உள்ளது. அதில், நானோ பேக் 2 வகை, ஜாய் பேக், ஹை பேக், தீபாவளி பேக், பிரோ பேக், பேமிலி பேக், பிங்க்ஸ் பேக், அனில் பன் பேக், ஜம்போ பேக் என 10 வகையான கூப்பன் விற்பனை செய்யப்படுகிறது. இந்த கூப்பன்கள் ரூபாய் 300 முதல் ரூபாய் 3,000 வரையிலும் கிடைக்கும். இதற்கான கூப்பன்கள் தபால் அலுவலகங்களிலும் தபால்காரர்களிடமும் பெற்றுக் கொள்ளலாம்.
தபால் நிலையங்களில், சந்தை விலையை விட 10% குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 24ஆம் தேதி வரை தியாகராயநகர், மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, தேனாம்பேட்டை, ஆயிரம்விளக்கு, நுங்கம்பாக்கம், கிரீம்ஸ் சாலை, சூளைமேடு, சாஸ்திரிபவன், சென்னை பல்கலைக்கழகம், சேப்பாக்கம், விவேகானந்தா கல்லூரி, மந்தைவெளி உள்ளிட்ட 25 தபால் அலுவலகங்களில் இந்த கூப்பன்களை பெற முடியும். தபால் அலுவலகங்கள் அருகில் உள்ள பட்டாசு குடோன்களுக்கு சென்று கூப்பன்களைக் காண்பித்தால் பட்டாசுகள் அடங்கிய அட்டைப்பெட்டி வழங்கப்படும். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது என தியாகராயநகர் தலைமை தபால் அலுவலகம் செய்திக்குறிப்பில் வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், சென்னைத் தீவுத்திடலிலும் 58 பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டு நேற்று முதல் விற்பனைக் களைகட்டியுள்ளது. கடந்த ஆண்டை விட, இப்போது பட்டாசுகளின் விலை 10% உயர்ந்துள்ளது. ஆனால், அனைத்து வகையான பட்டாசுகளுக்கும் 10 முதல் 15% வரை சலுகை வழங்கப்படும் என தீவுத்திடல் பட்டாசு விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, மக்கள் தாங்கள் விரும்பிய இடங்களில் பட்டாசுகளை வாங்கி தீபாவளியைக் கொண்டாடலாம்.