750 பதவிகளுக்கு நடத்தப்பட்ட எழுத்துத் தேர்வு முடிவுகள் வெளியானது !

தமிழ்நாடு மின்வாரியத்தில் காலி யாக உள்ள 750 பதவிகளுக்கு நடத்தப்பட்ட எழுத்துத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.தமிழ்நாடு மின்வாரியத்தில் காலியாக இருக்கும் 750 பல்வேறு பதவிகளுக்கு அண்ணா பல்கலை கழகம் வாயிலாக கடந்த ஜூன் 19 மற்றும் ஆகஸ்ட் 27 மற்றும் 28-ம் தேதிகளில் நடத்தப்பட்ட எழுத்து தேர்வின் முடிவு நேற்று (19-ம் தேதி) வெளியிடப்பட்டுள்ளது.

தேர்வர்கள் அவர்களுடைய மதிப் பெண்களை www.tangedcodirect recruitment.in என்றஇணையதளம் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

 சென்னை உயர் நீதிமன்றம் அளித்துள்ள இடைக்கால தடை உத்தரவு நீக்கம் செய்யப்பட்ட பிறகு 525 (500 மின்னியல் + 25 இயந்திரவியல்) தொழில்நுட்ப உதவியாளர்கள் மற்றும் 900 கள உதவியாளர்கள் பதவிகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப் படும்.தமிழக அரசால் நிர்ணயம் செய் யப்பட்டுள்ள இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் 1:5 என்ற விகிதத் தில் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். நவம் பர் 2-ம் தேதி முதல் நேர்காணல் நடத்த உத்தேசிக்கப் பட்டுள்ளது. நேர்முகத் தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு தேதி, இடம் மற்றும் நேரம் தொடர்பான விவரங்கள் இணையதளம் வாயிலாக பின்னர் தெரிவிக்கப் படும்.

நேர்முக தேர்வுக்கு பிறகு, எழுத்துத் தேர்வுக்கு 85 சதவீதமும், நேர்முக தேர்வுக்கு 15 சதவீதமும் (10 மதிப்பெண் நேர்காணலுக்கும், 5 மதிப்பெண் கல்வித் தகுதிக்கும்) கணக்கீடு செய்து இறுதியாக இட சுழற்சி முறையை பின்பற்றி நியமனம் செய்யப்படுவார்கள். 21 நபர்களின் தேர்வு முடிவுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.எழுத்துத் தேர்வு மதிப்பெண் குறித்த விவரங்களுக்கு தொலைபேசி எண். 044-22358311 மற்றும் 044-22358312மூலமாக (காலை 10.30 மணி முதல் மதியம் 5.30 மணி வரை) தொடர்பு கொண்டு அறியலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...