கடந்த ஜூலை - செப்டம்பர் காலாண்டில் இந்தியாவில் 25 சதவிகித உயர்வுடன் சுமார் 3.5 கோடி ஸ்மார்ட்போன்கள் விற்பனையாகியுள்ளது.
இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஸ்மார்ட்போன் இல்லாத ஆளே இல்லை என்றே கூறலாம். இந்தியாவின் ஸ்மார்ட்போன் பயன்பாட்டின் தீவிரத்தை அறிந்த சீனா உள்ளிட்ட பிற நாட்டு
ஸ்மார்ட்போன்களும் இந்திய சந்தையை ஆக்கிரமித்து வருகின்றன. அதிவேக 4ஜி டேட்டா சேவையை ஜியோ அறிவித்ததால், அதைப் பயன்படுத்துவதற்காகவே புதிய ஸ்மார்ட்போன்கள் வாங்குபவர்களும் உள்ளனர்.
இந்நிலையில் நடந்து முடிந்த காலாண்டில் இந்தியாவில் ஸ்மார்ட்போன் விற்பனை இதுவரை இல்லாத அளவுக்கு விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. அதாவது, ஜூலை - செப்டம்பர் காலாண்டில் 3.5 கோடி ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் முன்னிலையில் இருக்கும் சாம்சங் மைக்ரோமேக்ஸ், இண்டெக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களை மிஞ்சும் வகையில் சீனாவின் லெனோவோ, க்ஷியோமி, விவோ, ஆப்போ உள்ளிட்ட நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களும் கடந்த காலாண்டில் இந்தியாவில் அதிகமான அளவில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. சீன ஸ்மார்ட்போன்கள் ஒட்டுமொத்தமாக முந்தைய காலாண்டைவிட 32 சதவிகிதம் அதிகமான அளவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில், அதிகபட்சமாக சாம்சங் 21.60 சதவிகிதமும், மைக்ரோமேக்ஸ் 9.80 சதவிகிதமும், லெனோவோ (மோட்டாரோலா) 8.90 சதவிகிதமும், ரிலையன்ஸ் எல்.ஒய்.எஃப். 6.70 சதவிகிதமும், இண்டெக்ஸ் 6.40 சதவிகிதமும், க்ஷியோமி 6.20 சதவிகிதமும், ஆப்பிள் 1.30 சதவிகிதமும் மற்றும் பிற நிறுவன ஸ்மார்ட்போன்கள் 39.10 சதவிகிதமும் பங்குகளைக் கொண்டுள்ளன.
இந்தியாவில் ஸ்மார்ட்போன் சந்தையில் முதலிடத்தில் இருக்கும் சாம்சங் நிறுவனமும், இந்தியாவின் முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனமான மைக்ரோமேக்ஸும் ஜூலை - செப்டம்பர் காலாண்டில் 4 சதவிகிதம் சரிவைச் சந்தித்துள்ளன. அதேநேரத்தில் சீனாவின் க்ஷியோமி ஸ்மார்ட்போன்கள் விற்பனை தீவிரமாக இருந்ததால் ஆறாவது இடத்துக்கு முன்னேறியது. ரிலையன்ஸ் ஜியோவின் வருகையால் முன்கூட்டியே ரிலையன்ஸ் எல்.ஒய்.எஃப். ஸ்மார்ட்போன்கள் கடந்த காலாண்டில் அதிகரித்தது. இதன் மூலமாக இந்நிறுவனம் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் அதிரடியாக நான்காவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. மேலும், நடப்பு காலாண்டில் இதன் விற்பனை அதிகரித்து மூன்றாம் இடத்துக்கு முன்னேறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.