விண்கலத்தைக் காணோம் - குழப்பத்தில் விஞ்ஞானிகள்!

செவ்வாய்க்கிரக ஆராய்ச்சிதான் முக்கிய நாடுகளின் விண்வெளி ஆராய்ச்சியாளர்களுக்கு தீனி போட்டுக் கொண்டிருக்கிறது. அதன்வரிசையில், இங்கிலாந்து விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் சார்பாக Schiaparelli என்ற விண்கலம் செவ்வாய்க் கிரகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த விண்கலம் அனுப்பியதற்கான காரணம் செவ்வாய்க் கிரக சுற்றுவட்டப் பாதையிலிருந்து

கிரகத்தை ஆராய்ந்து செய்திகள் அனுப்புவதற்கு. அதுபோலவே, இந்த விண்கலம் நேற்று புதன்கிழமையன்று செவ்வாய்க் கிரக சுற்றுவட்டப் பாதையில் இணைந்தது. சுற்றுவட்டப் பாதையை அடைந்த சில நேரங்களிலே விண்கலத்துடனான இணைப்பு நின்றுவிட்டது. இதனால் ஆராய்ச்சியாளர்கள் அனைவரும் "அய்யா.. என் கிணற (விண்கலம்) காணோம்" மொமெண்ட்டில் ஷாக் ஆகிவிட்டனர்.

அதன்பின், பல மணிநேரம் போராடியவர்கள் ஒருவழியாக விண்கலத்துடைய சிக்னலை பெற்றுள்ளனர். ஆனால் சோகமான செய்தியாக விண்கலத்தில் கோளாறு ஏற்பட்டுவிட்டது. இதனால், இந்த புராஜெக்ட்டை கைவிட்டனர் இங்கிலாந்து விஞ்ஞானிகள்.

இதுகுறித்து முதன்மை ஆராய்ச்சியாளர் தெரிவித்திருப்பதாவது: Schiaparelli-வை நாங்கள் மிகவும் எதிர்பார்த்தோம். விண்கலத்தை விண்ணில் செலுத்துவது கடினம். அதிலும், இன்னொரு கிரகத்தின் சுற்றுவட்டப் பாதையில் செலுத்துவது அதைவிடக் கடினம். ஆனால் நாங்கள் இலக்கை அடைந்து தோல்வியைத் தழுவியதுதான் தாங்கிக்கொள்ள முடியவில்லை. மீண்டும் அடுத்தகட்ட முயற்சியை மேற்கொள்ள ஆயத்தமாக வேண்டும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...