காவிரி விவகாரம் தொடர்பான வழக்கு: பிற்பகலுக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைப்பு !

இன்று மாலை இடைக்கால உத்தரவு

காவிரி விவகாரம் தொடர்பான வழக்கை பிற்பகலுக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டது. காவிரி விவகாரத்தில் மத்திய தொழில்நுட்ப குழு அறிக்கையை மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
தமிழக அரசு எதிர்ப்பு
உச்சநீதிமன்றத்தில் தாக்கல்
செய்யப்பட்ட மத்திய தொழில்நுட்ப குழுவின் அறிக்கைக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆட்சேப மனுவை தாக்கல் செய்ய தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் அனுமதி கோரியுள்ளது.
கர்நாடக அரசு கோரிக்கை
காவிரி விவகாரத்தை 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்க வேண்டும் என கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளது. மேலும் கர்நாடகத்தின் மனு ஏற்றதா என்று பிற்பகலில் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்க உள்ளது.
மாலையில் இடைக்கால உத்தரவு
காவிரி வழக்கில் இன்று மாலை இடைக்கால உத்தரவு நிச்சயம் பிறப்பிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஜா ஆய்வறிக்கையில் இரு மாநிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது என்று தெரிவித்த நீதிபதிகள், அறிக்கையில் ஆட்சேபம் இருந்தால் எதிர்ப்பு தெரிவிக்கலாம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். காவிரி பிரச்சினையில் பேசிக்கொண்டே இருந்தால் என்னதான் தீர்வு என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...