தாமிரபரணி ஆற்றில் மூழ்கி ஏழு மாணவர்கள் பலி!

திருநெல்வேலியில் இரு இடங்களில் சென்னை மற்றும் புதுச்சேரியை சேர்ந்த ஏழு மாணவர்கள் தாமிரபரணி ஆற்றில் முழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளத்தில் பிரபாகரன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் கிருபாகரன் (21) இவர் சென்னை ஆண்டாள் அழகர் என்ஜினீரியங்

கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஆயுத பூஜை விடுமுறை நாட்களில் இவர் தன்னுடன் பயிலும் செங்கல்பட்டை சேர்ந்த தமீம் அன்சாரி (21) மற்றும் சோபன்பாபு (21) ஆகிய இரு நண்பர்களை ஊருக்கு அழைத்து வந்துள்ளார். நேற்று காலை 11 மணியளவில் மூன்று பேரும் முக்கூடலில் குளிப்பதற்காக சென்றுள்ளனர். முத்துமாரியம்மன் கோயில் பின்புறத்தில் ஆழமான இடத்தில் குளித்து கொண்டிருந்தபோது நீர் சுழற்சியில் சிக்கிக் கொண்டனர். மேலும், அவர்களுக்கு நீச்சல் தெரியாததால் பரிதாபமாக ஆற்றில் மூழ்கி இறந்தனர். பின்னர் இது குறித்து தீயணைப்பு படையினர் மற்றும் பாப்பாக்குடி போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, அவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே தலையணை உள்ளது. இங்கு குளிப்பதற்கு அதிகமான மக்கள் வருவது வழக்கம். இந்நிலையில் நேற்று மாலையில் ஆற்றில் ஒரு இளைஞரின் உடல் மிதப்பதை அங்குள்ளவர்கள் பார்த்து தீயணைப்பு படையினருக்கு தகவல் அளித்தனர். பின்னர், அடுத்தடுத்து நான்கு பேர் உடல் ஆற்றிலிருந்து இன்று காலை மீட்கப்பட்டது. ஆற்றில் பலியானவர்களில் வசந்தராஜ், சீனிவாசன் ஆகியோர் சென்னையைச் சேர்ந்தவர்கள் மற்றும் நக்கீரன், சதீஷ்குமார் ஆகியோர் புதுச்சேரியை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.

இவர்கள் கடந்த 8ஆம் தேதி சுற்றி பார்ப்பதற்காக நெல்லைக்கு வந்ததாக தெரிகிறது. இவர்கள் மக்கள் வழக்கமாக குளிக்காத இடத்தில் குளித்ததால் நீரில் மூழ்கி இறந்திருக்கின்றனர் என்று கூறப்படுகிறது. தாமிரபரணி ஆற்றில் அடுத்தடுத்து ஏழு இளைஞர்கள் பலியாகியிருப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து விக்கிரமசிங்கபுரம் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் குளம், ஆறு போன்ற நீர்நிலைகளில் மூழ்கி இறப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து செல்கிறது. 2009ஆம் ஆண்டு 20 பேர் நீர்நிலைகளில் மூழ்கி இறந்தனர். 2010ஆம் ஆண்டு 19 பேரும், 2011ஆம் ஆண்டு 19 பேரும் பலியானார்கள். 2012ஆம் ஆண்டு 26 பேர் பலியாகியுள்ளனர். குமரி மாவட்ட தீயணைப்பு துறையின் கணக்கெடுப்பின் அடிப்படையில் இறந்தவர்களின் எண்ணிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்று தமிழகத்தில் நீச்சல் தெரியாமல் இறப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து கொண்டே இருக்கிறது. மேலும், நமக்கு தெரியாத இடத்துக்குச் செல்லும்போது, கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...