மத்திய நிபுணர் குழுவை சந்தித்தார் தமிழக முதன்மை செயலர் ராமமோகன ராவ்!

காவிரி மேலாண்மை வாரியத்தை நிராகரித்த மத்திய அரசின் கோரிக்கையை ஏற்ற உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் உயர் மட்ட தொழில் நுட்பக் குழுவை அமைத்தது மத்திய அரசு. ஜி.எஸ் .ஷா தலைமையில் 14 பேர் கொண்ட மத்திய நிபுணர் குழு அமைக்கப் பட்டு கர்நாடகம், தமிழகத்தை ஆய்வு செய்ய அனுப்பப் பட்டது.

கர்நாடகத்தில் தங்களின் ஆய்வை முடித்த இந்தக் குழு 2 நாள் பயணமாக தமிழகத்தில் ஆய்வு செய்து வந்த அந்த நிபுணர் குழு தமிழ்நாட்டில் உள்ள காவிரி பாசன பகுதிகள் , அணைகள் ஆகியவற்றை ஆய்வு செய்தது தங்களின் இரு நாள் ஆய்வை முடித்த இந்தக் குழுவினரை இன்று தமிழக தலைமை செயலாளர் ராமமோகன ராவ் சென்னையில் வைத்து சந்தித்தார். தமிழகத்தின் தண்ணீர் தேவைகள் பற்றி குழுவிடம் விரிவாக எடுத்துக் கூறினார் தலைமைச் செயலாளர். தமிழகத்தில் மேற்கொண்ட ஆய்வுகள் பற்றி இந்தக் குழுவின் தலைவர் ஷா பேசும் போது “

தமிழக விவசாயிகள் விவசாயம் தேவைகள் தொடர்பான பல்வேறு மனுக்களை தங்களிடம் கொடுத்தனர். தமிழகம், கர்காடகாவில் மேற்கொள்ளப் பட்ட இந்த ஆய்வு முடிவுகள் வருகிற 17-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று கூறினார்.” ஷா.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...