உச்சநீதிமன்றத் தீர்ப்பை உறுதி செய்யும்படி தம்பிதுரை தலைமையில் அதிமுக எம்.பிக்கள் ஊர்வலமாகச் சென்று பிரதமர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளனர். நான்கு நாட்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் அமைத்த கெடு இன்றுடன் முடிவடையும்
நிலையில், நேற்று பதில் மனு தாக்கல் செய்த மத்திய அரசு, ‘மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட முடியாது. நாடாளுமன்றத்தைக் கூட்டி சட்டமியற்றிதான் அதைச் செய்ய முடியும்’ என்று பதிலளித்துள்ளது. இது தமிழகத்தில் அதிர்ச்சியை உருவாக்கிய நிலையில், தமிழகத் தலைவர்கள் தங்கள் கண்டனங்களை மோடி அரசுக்கு எதிராக பதிவு செய்துள்ளதோடு தமிழகத்தில் அனைத்துக்கட்சி கூட்டத்தையும், சட்டமன்றத்தையும் கூட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் அதிமுகவின் 39 எம்.பிக்களும் நாடாளுமன்றத்தில் இருந்து பிரதமர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாகச் சென்றனர். பிரதமர், மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி, சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ஆகியோரைச் சந்தித்து முறையிட திட்டமிட்டிருந்தனர். பிரதமரைச் சந்திக்க அவர்கள் நேரம் கேட்டிருந்த போதிலும் அதற்கான நேரமோ, உருப்படியான பதிலோ இல்லாத நிலையில் ஏமாற்றமடைந்த அவர்கள் பிரதமர் அலுவலகத்தில் தங்கள் மனுவைக் கொடுத்துவிட்டு வந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக நாடாளுமன்றக்குழு தலைவர் தம்பிதுரை, “தமிழக முதலமைச்சரின் உத்தரவின்படியே தமிழக அரசின் சார்பாக நாங்கள் இந்த மனுவை பிரதமர் அலுவலகத்தில் கொடுத்துள்ளோம். உச்சநீதிமன்ற உத்தரவின்படி இன்றுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க இயலாது என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த மனுவைத் திரும்பப் பெற வேண்டும். செப்டம்பர் 1ஆம் தேதி உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி தமிழக உரிமை நிலைநாட்டப்பட வேண்டும் என்பதே எங்கள் ஊர்லவத்தின் நோக்கம்” என்றார் தம்பிதுரை. அப்போது ஊடகவியலாளர் ஒருவர் திமுக பொருளாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவருமான ஸ்டாலின், “உங்களை எல்லாம் ராஜினாமா செய்யுமாறு கோரியிருக்கிறாரே?” என்று கேட்க அதற்கு பதிலளித்த தம்பிதுரை “முதலில் திமுக எம்.பிக்கள்தான் ராஜினாமா செய்ய வேண்டும்” என்று பதிலளித்தார்.